வற்றாத செல்வம் பெற்று வளமாய் வாழ சில எளிய புதன் கிழமை பரிகாரங்கள்!

தீராத பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, சகல செல்வஙக்ளும் பெற்று, நிம்மதியான வாழ்க்கை கிடைக்க சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 19, 2022, 09:32 PM IST
  • பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று ஒரு பழ மொழி உண்டு.
  • பொன்னான புதனில் செய்யப்படும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.
  • குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட பரிகாரம்.
வற்றாத செல்வம் பெற்று வளமாய் வாழ சில எளிய புதன் கிழமை பரிகாரங்கள்! title=

விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட புதன்கிழமை சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. விநாயகர் இந்த நாளில் அவதரித்தார் என புராணங்கள் கூறுகின்றன. பார்வதி தேவி தன் கைகளால் விநாயகனை பெருமானை உருவாக்கிய நாள் புதன்கிழமை என்றும் ஒரு கதை உண்டு.  எனவே புதன் கிழமை அன்று விநாயக பெருமானை வழிபடுவது சிறப்பு. புதன் கிழமையில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும் என்று ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உடல்நலக் கோளாறுகள், நிதி பிரச்சனை உட்பட பல வகையான பிரச்சனைகளும் விலகும்.

செல்வத்திற்கான புதன் பரிகாரம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று ஒரு பழ மொழி உண்டு. அப்படிப்பட்ட பொன்னான புதனில் செய்யப்படும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். நிதி நிலைமை மேம்பட்டு செல்வம் சேர புதன்கிழமையன்று பிராமணருக்கு  பச்சை பயிறு தானம் செய்யுங்கள். ஆனால், ராகுகாலத்தில் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஒன்றரை கிலோகிராம் பச்சை பயிறை ஊறவைத்து  நெய் மற்றும் சர்க்கரை கலந்து காலை அல்லது மாலை பசுவிற்கு உணவாக கொடுக்கவும். இதனால் உங்கள் வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

ஆரோக்கியத்திற்கான புதன்கிழமை பரிகாரம்

நல்ல ஆரோக்கியத்திற்காக, புதன் கிழமையன்று திருநங்கைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். தானமாக வழங்கும் துணியின் நிறம் பச்சையாக இருக்க வேண்டும். இது தவிர, முளை கட்டிய பச்சை பயிறையும் தானம் செய்ய வேண்டும்.

குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட பரிகாரம்

தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபட, புதன் கிழமையன்று கணபதிக்கு அருகம்புல் மாலை சாற்றவும். புதன் மட்டுமல்ல, தினமும் இப்படி செய்து வந்தால், விரைவில் பிரச்சனைகள் நீங்கும்.

மேலும் படிக்க | ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

பணியில் உள்ள தடைகள் நீங்க பரிகாரம்

வெற்றி மீது வெற்று வந்து உங்களை சேர, புதன்கிழமை, விதிமுறைப்படி விநாயகப் பெருமானை வணங்குங்கள். இது தவிர, வழிபாட்டின் போது, ​​அதர்வஷிர்ஷ  ஸ்தோத்திரத்தை கூறவும். கணபதி அதர்வஷீர்ஷ ஸ்தோத்திரம் அதர்வண வேதத்தின் முக்கிய ஸ்தோத்திரமாக கருதப்படுகிறது.

மன நிம்மதி பெற பரிகாரம்

நிம்மதியான வாழ்வை  கொடுத்து அருளும் விநாயகப் பெருமானின் அருளைப் பெற புதன்கிழமை சிறப்பான நாளாகக் கூறப்படுகிறது. இந்நாளில் காலையில் பசுவுக்கு பசும் புல் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புதன் தோஷத்தின் அசுப பலன்கள் விலகும். அதே நேரத்தில், மன நிம்மதியும் உற்சாகமும் கிடைக்கும்.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News