மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமா... ராசிக்கு ஏற்ற எளிய மந்திரங்கள்!

உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி உழைத்தாலும், சில சமயங்களில் பலன் இருப்பதில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2022, 07:03 PM IST
  • உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள்.
  • ராசிகளுக்கு ஏற்ற மந்திரங்கள்.
  • லக்ஷ்மி தேவி வசிக்காத வீட்டில் வறுமை குடியிருக்கும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமா... ராசிக்கு ஏற்ற எளிய மந்திரங்கள்! title=

பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்று, செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். மகாலட்சுமியின் மனம் குளிர்ந்து செல்வம் கொழிக்க ராசிக்கு ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி உழைத்தாலும், சில சமயங்களில் பலன் இருப்பதில்லை. அந்த நிலை நீங்கி, என்றென்றும் செல்வ செழிப்புடன் திகழ, உங்களது ராசிக்கு ஏற்ற பரிகாரங்களை பார்க்கலாம். 

வெள்ளிக்கிழமை அன்னை மகாலட்சுமிக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை முறையாக வணங்கினால் ஆள் மணம் குளிர்ந்து செல்வ செழிப்பினை வழங்குகிறார். தேவியை இளஞ்சிவப்பு பூக்களை கொண்டு பூஜியுங்கள். ரோஜா மலர்கள் அன்னை லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவை.

வெள்ளிக்கிழமையில் ராசிப்படி, அன்னை லட்சுமி தேவியின் மந்திரங்களை ஜபித்து வந்தால், வாழ்நாள் முழுவதும் அவளது அருள் பெற்று வளமாக வாழலாம். லக்ஷ்மி தேவி வசிக்காத வீட்டில் வறுமை குடியிருக்கும்.

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்! 

ராசிகளுக்கு ஏற்ற மந்திரங்கள்

மேஷம் - லக்ஷ்மி தேவியை மகிழ்விக்க "ஓம் ஐம் க்ளீன் ஸௌன்:" (ॐ ऐं क्लीं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி தேவியை மகிழ்விக்க "ஓம் ஐம் க்லீம் ஶ்ரீம்" (ॐ ऐं क्लीं श्रीं) என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

மிதுனம் - லக்ஷ்மி அன்னையின் அருளைப் பெற, மிதுன ராசிக்காரர்கள், "ஓம் க்ளீன் ஐன் சௌன்:" (ॐ क्लीं ऐं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நல்லது.

துலாம் - துலாம் ராசிக்காரர்கள் மகாலட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், "ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்" (ॐ ह्रीं क्लीं श्रीं ) என்ற மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் பலன் தரும்.

கடகம் - மகாலட்சுமியின் அருளைப் பெற இந்த ராசிக்காரர்கள் "ஓம் ஐம் க்ளீன் ஸ்ரீ" (ॐ ऐं क्लीं श्रीं) என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

சிம்மம் - லக்ஷ்மி அன்னையின் அருளை பூரணமாக பெற, சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஸௌன்:" (ॐ ह्रीं श्रीं सौं:) என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

கன்னி- இந்த ராசிக்காரர்கள் லக்ஷ்மி அன்னையின் "ஓம் ஸ்ரீ ஐம் சௌன்:" (ॐ श्रीं ऐं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பான பலனைத் தரும்.

விருச்சிகம் - இந்த ராசிக்காரர்கள் "ஓம் ஐம் க்ளீன் ஸௌன்:" (ॐ ऐं क्लीं सौं:) என்ற இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் பலன் கிடைக்கும்.

தனுசு - "ஓம் ஹ்ரீம் க்லீம் ஸௌன்:" (ॐ ह्रीं क्लीं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மியின் அருளைப் பூரணமாக பெற, "ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீ ஸௌன்:" (ॐ ऐं क्लीं ह्रीं श्रीं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

கும்பம் - இந்த ராசிக்காரர்கள் "ஓம் ஹ்ரீம் ஐம் க்லீன் ஸ்ரீம்" (ॐ ह्रीं ऐं क्लीं श्रीं) என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

மீனம் - மகாலக்ஷ்மி அன்னையின் அருளைப் பெற விரும்பினால், "ஓம் ஹ்ரீம் க்லீம் சௌன்:" (ॐ ह्रीं क्लीं सौं:) என்ற மந்திரத்தை உச்சரிக்கவும்.

ராசிப்படி ஜபித்தால் அதிக பலன் கிடைக்கும்

எந்த தெய்வத்தின் மந்திரங்களை உச்சரித்தாலும் அவர்களின் அருள் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. ராசிப்படி மந்திரம் ஜபித்தால் பலன் அதிகம் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News