அக்ஷய திருதியையில் மகாலட்சுமியின் அருள்... 5 ராசிகளுக்கு தனயோகம்!

Akshaya Tritiya 2024: அக்ஷய திருதியை  என்றாலே மங்களகரான நாள் தான். மேலும், இந்த நாளில், ரோகிணி நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இந்த நாளில் சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருப்பதன் காரணமாகவும், அபூர்வ யோகம் உருவாகி, இரட்டிப்பு பலன்களைத் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2024, 01:28 PM IST
  • சில ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
  • இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி அட்சய திருதியை.
  • லக்ஷ்மி தேவியின் அருளால் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.
அக்ஷய திருதியையில் மகாலட்சுமியின் அருள்... 5 ராசிகளுக்கு தனயோகம்! title=

Akshaya Tritiya 2024: அக்ஷய திருதியை  என்றாலே மங்களகரான நாள் தான். மேலும், இந்த நாளில், ரோகிணி நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இந்த நாளில் சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருப்பதன் காரணமாகவும், அபூர்வ யோகம் உருவாகி, இரட்டிப்பு பலன்களைத் தரும். இதனால் உருவாகும் கஜகேசரி யோகத்துடன், வெள்ளிக்கிழமை அட்சய திருதியை தினமாக இருப்பது மிகவும் சிறப்பான தற்செயல் நிகழ்வு. வெள்ளிக்கிழமை அன்னை மகாலட்சுமி தேவிக்கு உரிய நாள். அதாவது லட்சுமி தேவியும் இந்த நாளில் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். ரிஷபம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். லக்ஷ்மி தேவியின் அருளால் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.

அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி, இந்த நாளில் பல நல்ல யோகங்கள் உருவாகியுள்ளன. கஜகேசரி யோகத்துடன், இந்த நாளில் சுக்கிரன் கிரகங்களின் ராஜாவான சூரியனுடன் மேஷ ராசியில் இருக்கும் நிலையில், அட்சய திருதியை அன்று சுக்ராதித்ய யோகமும் உருவாகிறது. மேலும், சனி தனது மூலஸ்தானத்தில் இருப்பதால் ஷஷ ராஜயோகம் உருவாகிறது. இதனுடன் செவ்வாய் மற்றும் புதன் இணைவதால் மீனத்தில் தன யோகமும் உருவாகிறது. இத்தனை ஐஸ்வர்ய யோகங்கள் கொண்ட அட்சய திருதியை அன்று ரிஷபம், கடகம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களின் (Lucky Zodiacs) வாழ்வில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தரும்.

ரிஷப ராசி (Taurus Zodiac)

அட்சய திருதியை அன்று உருவாகும் மங்களகரமான யோகம் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் சிறந்த பலன்களை கொண்டு வரும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ பணம் வரும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். முதலீடு செய்வது பற்றி நீங்கள் சிந்திக்கலாம். இந்த நேரத்தில் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் குறையாமல் இருக்கும்.

மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்..... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்

மிதுன ராசி  (Gemini Zodiac)

அட்சய திருதியையின் மங்களகரமான நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வெற்றிகளையும் தரும். சுப யோகப் பலன் காரணமாக பொருள் இன்பம், வசதிகள் கிடைக்கும், செல்வம் பெருகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை மிக எளிதாக நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். வழக்கிலும் நீங்கள் வெற்றி பெறலாம். கடின உழைப்புக்குப் பிறகு, வெற்றி கை கூடும். போட்டித் தேர்வில் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள், அதிர்ஷ்டம் உங்கள் அருகிலேயே இருக்கும்.

கடக ராசி  (Cancer Zodiac)

கடக ராசிகளுக்கு, அட்சய திருதியை அன்று உருவாகும் சுப யோகம் காரணமாக வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். புதிதாக ஏதேனும் வேலையைச் செய்ய நினைப்பவர்கள் இந்த நேரத்தில் அதைத் தொடங்கலாம். அட்சய திருதியை காலம் அவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில், உங்கள் முயற்சிக்கான சிறந்த பலனைப் பெறுவார்கள். உங்கள் வீட்டிற்கு புதிய உறுப்பினர் வரலாம். மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

துலாம் ராசி  (Libra Zodiac)

துலாம் ராசிக்காரர்களுக்கு, அட்சய திருதியை பண்டிகை வாழ்வில் செழிப்பையும் அமைதியையும் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் ஒரு அற்புதமான சுற்றுலா பயணத்தை மேற்கொள்வீர்கள்.

தனுசு ராசி  (Sagittarius Zodiac)

அட்சய திருதியைக்கு பிறகு தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல காலம் தொடங்கும். உங்கள் பாக்கெட்டில் பணம் எப்போதும் நிரம்பியிருக்கும். வணிகர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். நீங்கள் பணத்தையும் சிறந்த வகையில் சேமிக்க முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் எல்லா வகையிலும் சாதகமான சூழலைப் பெறுவீர்கள். அனைத்து விஷயத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கையில் எங்கிருந்தோ நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சில சிறந்த சலுகைகளையும் பெறலாம். எங்கிருந்தோ எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News