Guru Peyarchi Palangal: கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை ராசியை மாற்றிக் கொள்கின்றன. அதிலும், சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், தற்போது மேஷ ராசியில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சுமார் ஒரு வருட காலத்திற்கு இரு முறை ராசியை மாற்றும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி வரை ரிஷபத்தில் இருப்பார். அன்று, ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுவார்.
குரு பெயர்ச்சி பலன்கள்
தேவகுரு மேஷ ராசியிலிருந்து விலகி மதியம் 12:59 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறார். மே மாத குரு பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடும். வேலை, அரசியல்,தொழில் என அனைத்திலும் வெற்றி பெறலாம். செல்வ வளமும் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம். இவர்களுக்கு அதிர்ஷ்டம், அறிவு, தாம்பத்ய மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியான குரு பகவான் மிகுந்த பலன்களைத் தருவார். இவர்களுக்கு குபேரன் ஆசிகளை பொழியப் போவதுடன், அவரின் அருளால் அதிகப் பணம் சம்பாதிப்பார்கள் என்றும் கூறலாம். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மேஷ ராசி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு அருள் மழையை பொழிவார். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்கள் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நீங்கள் நிறைய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். பண பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வணிகர்களுக்கு ஆண்டு சிறப்பாக இருக்கும். அவர்களின் வங்கி இருப்பு அதிகரிப்பதோடு, அதிக அளவில் சேமிப்பார்கள். வாழ்க்கையில் பொருள் இன்பங்களை அனுபவிப்பீர்கள். பழைய கடனை அடைக்க முடியும் அல்லது குறைந்தபட்சம் அதன் அழுத்தம் குறையும். வியாபாரத்தில் தடைபட்ட பணம் கிடைக்கும். புதிய திட்டப்பணிகள் கிடைக்கும். உங்கள் வருமானம் பெருமளவில் உயரக்கூடும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி செல்வத்தைக் கொண்டு வரும். பல சமயங்களில் எதிர்பாராத பணம் கிடைக்கும். பெரிய அளவில் சொத்து வாங்கலாம். இந்த சொத்து முதலீடு எதிர்காலத்தில் உங்களுக்கு பெரிய லாபத்தை தரும். உங்கள் முக்கிய ஆசைகள் எதுவும் நிறைவேறலாம். இன்னும், நீங்கள் அலட்சியமாக செலவு செய்யக்கூடாது. இல்லையெனில் நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்தைப் பெறலாம். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் பெறுவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும்.
மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பெரும் பலன்களைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த முன்னேற்றம் அடையலாம். வணிகத் திட்டமிடல் துல்லியமாக இருக்கும். இதனால் வெற்றிகள் அகை கூடும். உங்களுக்கு பெரும் லாபத்தைத் தரும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக, சம்பள உயர்வுடன் புதிய வேலையும் கிடைக்கலாம். பணவரவு கூடும். கைக்கு வராது என நினைத்த பணத்தை பெற முடியும். ஜோதிட ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யலாம். இது எதிர்பார்க்க முடியாத அளவிலான லாபத்தை உருவாக்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும்.
பொறுப்புத் துறப்பு
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ