Solar Eclipse 2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழவிருக்கிறது. கிரகணத்தின் போது சூதக் காலம் நீடிக்கும், இது அசுபமான நேரமாக கருதப்படுகிறது, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தொடர்பான முக்கியமான விஷயங்களை தெரிந்துக் கொள்வோம். 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995 இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இதுபோன்ற சூழ்நிலை உருவானது. லட்சுமி பூஜை கொண்டாடப்படும் அடுத்த நாள் சூரிய கிரகணம் ஏற்படுவதால், அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை அனுசரிக்கப்படுகிறது.
நவராத்திரிக்குப் பிறகு, தீபாவளிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி பண்டிகையன்று அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்வது விசேஷமானது.
மேலும் படிக்க | Astro: 19 வருடங்கள் நீடிக்கும் சனி மகா திசை; சனியின் அருளைப் பெற செய்ய வேண்டியவை!
இந்த ஆண்டு தீபாவளி அன்று லட்சுமி பூஜைக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் ஏற்படுவதால், நள்ளிரவுக்குப் பிறகு சூதகம் தொடங்கும். சூரிய கிரகணத்தால் லட்சுமி பூஜையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சதுர்த்தசியுக்த அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. அது நவம்பர் 8 ஆம் தேதி, தேவ் தீபாவளி அன்று நிகழவிருக்கிறது.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
அமாவாசை திதியில் மட்டுமே சூரிய கிரகணம் நிகழும் என்பதால், தீபாவளியும் அமாவாசை அன்றுதான் நடக்கும். எனவே, இந்த முறை தீபாவளி அன்று இரவிலிருந்தே சூதக்காலம் தொடங்கிறது. இரவு 02:30 மணிக்கு அதாவது அக்டோபர் 24 அன்று தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலை 04:22 வரை சூதக்காலம் இருக்கும்.
இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் ஓரளவு தெரியும். அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு தொடங்கி மாலை 06.32 வரை தொடரும். இந்த சூரிய கிரகணம் சுமார் 4 மணி நேரம் 3 நிமிடங்கள் இருக்கும். அந்த நேரத்தில் இறை வழிபாடு நன்மை பயக்கும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை.)
மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ