ராகுவின் அருளால்... குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்!

குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும், ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2024, 06:45 PM IST
  • மீன ராசியில் சுக்கிரன் நுழைவதால் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறும்.
  • தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தில் ராகு, ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.
  • செல்வந்தர்களாக மாறப்போகும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள்.
ராகுவின் அருளால்... குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்! title=

குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும், ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள். ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறார் 18 மாதங்கள் ஒரே ராசியில் இருக்கிறார். ராகு 2023 அக்டோபரில் மீன ராசியில் பெயர்ச்சியான நிலையில் மே 2025 வரை இந்த ராசியில் நீடித்து இருப்பார். மீனத்தில் ராகு சஞ்சரிக்கும் போது, ​​மற்ற கிரகங்கள் ராகுவுடன் சுப மற்றும் அசுப சேர்க்கைகளை உருவாக்கும். தற்போது மீன ராசியில் சுக்கிரன் நுழைவதால் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெறும்.  இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருள் காரணமாக, அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தில் ராகு, ஐந்து ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கிடைக்கும் என்றும், நல்ல வருமானம் மற்றும் செழிப்புடன் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ராகுவின் தாக்கத்தால் செல்வந்தர்களாக மாறப்போகும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம்:  குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு, ராகு வரவிருக்கும் ஆண்டில் பல நல்ல வாய்ப்புகளை தருவார். வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் ராகு உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார்.  உங்கள் வருமானமும் நன்றாக இருக்கும். மேலும் திடீர் பண ஆதாயங்களுக்கான பல வாய்ப்புகளையும் பெறுவீர்கள். தடைப்பட்ட பணிகளை இந்த ஆண்டு தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருள் வசதிகளால் நீங்கள் பயனடைவீர்கள். 

கன்னி: குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி ராசியினருக்கு ராகுவின் சஞ்சாரம் தொடர்ந்து நன்மைகளையும் முன்னேற்றத்தையும் தரும். இந்த ஆண்டு பல சிறந்த வேலை வாய்ப்புகள் கைக்கு வரக்கூடும். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். வேலையில் உங்கள் சம்பளமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களும், மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். அனுகூலத்தைப் பெறுவீர்கள், புதிய உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வெளிநாடு செல்வதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதோடு, புதிய தொழிலையும் தொடங்கலாம்.

மேலும் படிக்க | இன்னும் இரண்டே நாட்கள்... சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

துலாம்: குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கு, ராகு குரோதி தமிழ் புத்தாண்டில், பணம் தொடர்பான விஷயங்களில் குறிப்பாக நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் ஆரோக்கியமும் இந்த ஆண்டு நன்றாக இருக்கும், மேலும் புதிய கார் அல்லது வீடு வாங்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி வந்து சேரும், இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். இந்த ஆண்டு வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் தற்போதைய நிலை மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும், மேலும் நீங்கள் முழு அர்ப்பணிப்புடன் செய்யும் எந்த வேலையிலும் வெற்றிகளை பெறலாம். உங்களின் நிறைவேறாத ஆசைகள் சில நிறைவேறும். இந்த ஆண்டு வேலை சம்பந்தமாக சில நல்ல செய்திகளைப் பெறலாம். மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கையும் இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும், உங்கள் பேச்சு திருமணத்தை கூட அடையலாம். வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்கும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். 

தனுசு: குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்

குறிப்பாக தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு இந்த ஆண்டு அனுகூலமாக இருக்கப் போகிறார். நிலுவையில் உள்ள உங்கள் வேலைகள் அனைத்தும் முடிவடையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த பழைய வழக்கிலும் நீங்கள் வெற்றி பெறலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். மேலும் புதிய தொழில் தொடங்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். தடைபட்ட பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். இந்த ஆண்டு உங்களுக்கு திருமண வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுபவ ரீதியான முடிவுகளால் நன்மை ஏற்படும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | புதனின் இடப்பெயற்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News