இன்றைய ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்..!!

தினசரி ராசிபலன்: சோபகிருது, மாசி 5ம் தேதி, பிப்ரவரி 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2024, 07:41 AM IST
  • உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
  • பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமான முடிவுகளை கொடுக்கும்.
இன்றைய ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்..!! title=

தினசரி ராசிபலன்: சோபகிருது, மாசி 5ம் தேதி, பிப்ரவரி 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

மேஷ ராசி பலன்

மனதில் இருக்கும் சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றத்திற்கான உத்தியை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தினருடன், சந்தோஷமாக பொழுதைக் கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷப ராசி பலன்

பண வரவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதனால் மன உளைச்சல் சிறிது ஏற்படும். எனினும் கவலைப்பட ஒன்றுமில்லை. விரைவில் சரியாகும். உங்கள் பேச்சில் கவனம் இருக்க வேண்டும். இதனால் வருங்கால பிரச்சனைகள் பலவற்றை தவிர்க்கலாம்.

மிதுன ராசி பலன்

முதலீடுகள் செய்யும் ஆர்வம் அதிகரிக்கும். எனினும் தகுந்த ஆலோசனையுடன் செய்வது நல்லது. யாருடனும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இதனால் பின்னால் சிக்கல்கள் ஏற்படலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தின் மீதும் நம்பிக்கை தேவை.

கடக ராசி பலன்

கடன் பிரச்சினைகள் குறைந்து நிம்மதியான வாழ்க்கை ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனத்தால், வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெரும் உங்கள் முயற்சி வெற்றி பெறும். பணவரவினால் முதலீடு செய்யும் ஆர்வம் ஏற்படும். தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யவும்.

சிம்மம் ராசி பலன்

மனதில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். இதனால், மனதில் இருந்த கவலைகள் நீங்கும்.

கன்னி ராசி பலன்

நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீக இடங்களுக்கு செல்லும் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் உற்சாகம் அதிகம் இருக்கும். வீட்டில் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதை கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

கடன் வாங்குவதை தவிர்ப்பதால், பல பிரச்சனைகளை, சிக்கல்களை தவிர்க்கலாம். கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. திட்டமிட்ட பணிகளை நிறைவேறி செய்வதில் தாமதம் ஏற்படலாம். எனினும் கவலைப்பட ஒன்றுமில்லை.

விருச்சிகம் ராசி பலன்

சவாலான பணிகளும் எளிதாக முடியும். உங்கள் திறமையை அதற்கு காரணமாக இருக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சுப காரியங்கள் நடப்பதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | shukra gochar 2024: மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

தனுசு ராசி பலன்

பண வரவு மகிழ்ச்சி அளிக்கும். இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமான முடிவுகளை கொடுக்கும். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம் ராசி பலன்

நீண்ட நாள் வேண்டுதல்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம் ராசி பலன்

பணிகளை முடிப்பதில் இருந்து வந்த தடைகள் விலகி, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உங்கள் பணி பாராட்டப்பட்டு அங்கீகாரம் கிடைக்கும். உறவுகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மீனம் ராசி பலன்

உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மனதில் நிம்மதி ஏற்படும். பழுதாகிய வாகனத்தை சீர் செய்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வாழ்க்கையில் அனுகூலங்கள் உண்டாகும்.

மேலும் படிக்க | Sun Transit: கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News