ராசிபலன்: இன்று 'இந்த' ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!

Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 18, 2024, 06:22 AM IST
  • இன்று பலருக்கு புதிய வேலைகள் கிடைக்கலாம்.
  • பிள்ளைகள் குறித்து சிலர் கவலைகொள்வீர்கள்.
  • உடல்நலன் சார்ந்து சிலருக்கு பிரச்னை வரும்.
ராசிபலன்: இன்று 'இந்த' ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...! title=

Daily Horoscope In Tamil: நீங்கள் உங்களின் நாளை தொடங்கும் முன் ராசிக்கான பலன்களை தெரிந்துகொண்டு தொடங்கும்போது ஒரு நேர்மறையான எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். அந்த வகையில், இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் இன்றைய ராசிபலன்களை இதில் காணலாம். 

மேஷம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகம் இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்களை கவலைக் கொள்ள செய்யும். வணிகர்கள் ரிஸ்க் எடுப்பதை இன்று தவிர்க்கவாம். சகோதரர்களின் உதவியால் நிலுவையில் இருக்கும் சில வேலைகள் நிறைவடையும்.

ரிஷபம்

இன்று உங்கள் மரியாதை அதிகரிக்கலாம். எதிரிகள் இன்றைய தினத்தில் பலமாக இருக்கலாம், அவர்களுக்கு எதிராக நீங்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் செலுத்திய கடின உழைப்பின் முழு பலனையும் இன்று பெறுவார்கள். 

மிதுனம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாகும். அதிக மதிப்புள்ள பொருள்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். அவை திருடுபோகவும் வாய்ப்புள்ளது. வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும்போது உடல்நல ஆரோக்கியம் குறித்துகவலை கொள்வீர்கள்.

கடகம் 

பணி சார்ந்து இயங்குபவர்களுக்கு இன்று சாதகமான நாளாகும். சிலருக்கு இன்று புதிய வேலை கிடைக்கலாம். பழைய வேலையால் சோர்வடைந்து புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு, அதிக சம்பளத்தில் மற்றொரு வேலைவாய்ப்பு அமையலாம். 

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி... உடல் உபாதைகள், மனக் கஷ்டம்... சூதானமா இருங்க மக்களே!

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு கடினமான நாளாகும். தேவையற்ற செலவுகள் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கன்னி

இன்று உங்கள் புகழ் அதிகரிக்கும். யாராவது உங்களிடம் அதிகலம் வாக்குவாதம் செய்தால் நீங்கள் அமைதியாக இருக்கவும். உங்கள் குடும்பத்தினருடன் எங்காவது சுற்றுலா செல்லவும் இது சாதகமான நாளாகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பண வரவு இருக்கும். உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பணத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால், பல விஷயங்களை ஆராய்ந்து எதிலாவது முதலீடு செய்வது நல்லது. குடும்பத்தில் தகராறு வரும்பட்சத்தில் அனைத்து தரப்பு வாதங்களை கேட்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நல்ல நாள். உங்கள் பணியினை எவ்வித தடையும் இன்றி எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் குழந்தைகளின் செலவுகள் கவலையடைய செய்யலாம். இந்த விஷயத்தில் நீங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.

மேலும் படிக்க | அட்சய திருதியில் தன யோகம்.. இந்த ராசிகளுக்கு செல்வம், பணம், வெற்றி மேல் வெற்றி

தனுசு

இன்று உங்களின் முடிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். சில கசப்பான சம்பவங்கள் இன்று நடக்கலாம், இருப்பினும் நீங்கள் பொறுமையுடன் இருந்து பிரச்னையை தவிர்க்கவும். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களிடம்...

மகரம்

குடும்பச் சண்டைகளை இன்று தவிர்த்துவிடுங்கள். நீண்ட நாள் பிரச்னைக்கான தீர்வு இன்று உங்களின் தந்தை மூலம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையும் உங்கள் முடிவுகளில் துணையாக நிற்பார்.

கும்பம்

சொத்து சார்ந்த பிரச்னைகள் இன்று தீர்க்கப்படலாம், அது உங்களுக்குச் சாதகமாக இருக்கலாம். இருப்பினும் வேறு சில பிரச்னைகள் இன்று உங்களை அண்டலாம். 

மீனம்

இன்று யாராவது உங்களின் மனதை அதிகம் காயப்படுத்தலாம். அதனால் நீங்கள் மிகவும் கவலையடைவீர்கள். மன உளச்சலுக்கு உள்ளாவீர்கள். அதில் இருந்து உடனே மீண்டு வர முயற்சி செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்த ராசிபலன் என்பது பல்வேறு ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு இங்கு வழங்கப்பட்டுள்ளது. எங்களின் குறிக்கோள் இன்றைய ராசிபலன் சார்ந்த தகவலை உங்களுக்கு வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)

 

மேலும் படிக்க | புதன் உதயம்... இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு... பண நெருக்கடி!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News