மிதுன ராசியில் புதன் சஞ்சாரம்! ஜூன் 14 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீங்கள் தானா?

Budhan Peyarchi Palangal: மிதுன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2024, 06:55 PM IST
  • வியாழனன்று புதன் பெயர்ச்சி!
  • ஜூன் 14 புதன் சஞ்சார பலன்கள்
  • கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
மிதுன ராசியில் புதன் சஞ்சாரம்! ஜூன் 14 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீங்கள் தானா? title=

மிதுனத்தில் புதன் பெயர்ச்சி: ஜூன் 14, 2024 அன்று, புதன் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. நமது வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம் மற்றும் மனவலிமையைத் தரும் புதன் கிரகம், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவர்கள் புத்திசாலி என்று பெயர் வாங்குவார்கள்.

ஆனால், அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில், கிரகப் பெயர்ச்சிகளின் தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்போது, இன்னும் இரு நாட்களில் மிதுன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்

ராகு, கேது போன்ற சாயா கிரகங்களால் எதிர்மறையாக பாதிக்கப்பட்டால் வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படலாம். அதுவே, புதன் செவ்வாயுடன் இணைந்தால் புத்திசாலித்தனம், மனதில் அமைதி என மனதில் மகிழ்ச்சி பொங்கும். தற்போது  மிதுனத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கத்தினால் யாருடைய வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்? புதனால் துரதிர்ஷ்டத்தை எதிர்கொள்ளப் போகும் ராசிகள் (Zodiac Signs) எவை என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

கடகம்

புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பண விவகாரங்களில் பிரச்சனையைக் கொடுக்காது. ஆனால், குடும்பத்தில் திட்டமிட்ட சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம் என்பதால், மனதில் மகிழ்ச்சி இருக்காது. வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்த அளவு பலன் இல்லை என மனசோர்வு ஏற்படும். எப்போதோ செய்த தவறுகளுக்கான விளைவுகளை தற்போது எதிர்கொள்ள நேரிடும். அதிலும், ஆனி மாதம் தொடங்கிய பிறகு வேலையில் சுணக்கம், எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப்போவது என மனசோர்வு ஏற்படும்.  

மகரம்

எதிர்வரும் புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மோசமாகலாம். மனதிலிருக்கும் எண்ணங்களை அப்படியே வெளியில் சொல்வது என்பது தற்போது உங்களுக்கு எதிராகவே முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டாம். வாய் கட்டுப்பாடு இருப்பது அவசியம். இது பேச்சுக்கு மட்டுமல்ல, உணவு உண்பதிலும் வாய்க்கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று கோளாறுகல் ஏற்படலாம்.  

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்

மீனம்

புதன் பெயர்ச்சி, மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களை அளிக்கும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் இருக்காது. மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தை முடிவு செய்யும் காலம் இது. எனவே கவனத்துடன் படிக்கவும். தேர்வு நேரத்தில் மனதை அலையவிட வேண்டாம். புதனின் பெயர்ச்சி உங்களுக்கு பிரச்சனை கொடுத்தாலும், சமயோஜிதமாக வாய்க்கட்டுபாட்டுடன் இருந்தால் நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News