வானில் இருந்தாலும் பஞ்சபூதங்களின் குணங்கள் கொண்ட கிரகங்கள்! ஜோதிடம் அறிவோம்...

12 zodiac horoscope Basic Traits: 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2024, 04:46 PM IST
  • ஜோதிடத்தின் அடிப்படை காரணிகள்
  • ராசி மற்றும் நட்சத்திரங்களின் பகுப்பு
  • நட்சத்திரங்களின் அதிபதிகள்
 வானில் இருந்தாலும் பஞ்சபூதங்களின் குணங்கள் கொண்ட கிரகங்கள்! ஜோதிடம் அறிவோம்... title=

ஜோதிட சாஸ்திரத்தின்படி 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. சூரியன் பித்ருவாக கருதப்படுகிறார். சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் 12 ராசிகளும் ராசி மண்டலத்தில் உள்ளன. 

27 நட்சத்திரங்கள்

அதேபோல, அசுவினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி என 27 நட்சத்திரங்கள் நட்சத்திர மண்டலத்தில் உள்ளன. இந்த நட்சத்திரங்களின் அதிபதியாக 9 கிரகங்களும் உள்ளன.

ராசி அதிபதிகள்

இதில், அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாக கேது பகவான் உள்ளார் என்றால், பரணி, பூரம், பூராடம்
ஆகிய மூன்று ராசிகளுக்கு சுக்கிர பகவான் அதிபதி. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் என 3 நட்சத்திரங்களுக்கு சூரியன் அதிபதியானால், ரோகிணி, அஸ்தம், திருவோணம் என அடுத்த மூன்று நட்சத்திரங்களுக்கு சந்திரன் அதிபதியாக இருக்கிறார்.

மேலும் படிக்க | இன்னும் 37 நாள் தான்! சனியின் வக்ரகதியால் அருமையான எதிர்காலம்! 3 ராசிகளுக்கு அருமை!

நட்சத்திர அதிபதிகள்

அதேபோல, செவ்வாய் கிரகம் மிருகசீரிடம், சித்திர, அவிட்டம் நட்சத்திரங்களுக்கு அதிபதி என்றால், இராகு பகவான் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களுக்கும், குரு பகவான் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கும், இறுதியாக சனீஸ்வரர் பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு அதிபதியாக இருக்கின்றனர்.

பஞ்சபூதங்களின் அடிப்படையில் ராசிகள்

இதுபோலவே, பஞ்சபூதங்களின் அடிப்படையில், நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நெருப்பு ராசிகளின் பொதுவான குணங்கள் கோபம், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகும்.

நிலம்

நிலத்தை அடிப்படையாக கொண்ட ராசியின் பொதுவான குணங்கள் பொருமை, அன்பு மற்றும் பாசம் ஆகும்.

காற்று

காற்று ராசியின் பொதுவான குணங்களாக சொல்லப்படுபவை, மனம் அலைபாய்தல், தற்பெருமை மற்றும் உற்சாகம்

நீர் 

நீர் ராசியின் பொதுவான குணங்கள் என்றால் சூழலுக்கு தகுந்தவாறு மாறுதல், அமைதி மற்றும் இளகிய மனம் என்று சொல்வார்கள்.

மேலும் படிக்க | ரிஷபத்திற்கு போவதற்கு முன்னால் 4 ராசிகளுக்கு நல்லது செய்யப் போகும் புதன்! அதிர்ஷ்டகார ராசிகள் எவை?

பஞ்சபூதங்களின் அடிபப்டைஇல் 12 ராசிகளின் பகுப்பு

மேஷம் - நெருப்பு
ரிஷபம் - நிலம்
மிதுனம் - காற்று
கடகம் - நீர்
சிம்மம் - நெருப்பு
கன்னி - நிலம்
துலாம் - காற்று
விருச்சிகம் - நீர்
தனுசு - நெருப்பு
மகரம் - நிலம்
கும்பம் - காற்று
மீனம் - நீர் 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News