செல்வத்தை குவிக்கப் போகும் சுக்கிரன்.. நட்சத்திர பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு

Shukra Nakshatra Transit 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணியான சுக்கிர பகவான் சமீபத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, போன்றவற்றை கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 22, 2024, 04:18 PM IST
  • வாழ்க்கைத்துணையின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.
  • இந்த பயணங்களாக நிதி ஆதாயம் உண்டாகும்.
  • வருமான பெருகும், சம்பள உயர்வை பெறுவீர்கள்.
செல்வத்தை குவிக்கப் போகும் சுக்கிரன்.. நட்சத்திர பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு title=

சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி பலன்கள் 2024: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்குபவர் சுக்கிரன் ஆவார். அதுமட்டுமின்றி செல்வம், செழிப்பு, ஆடம்பரம், மகிழ்ச்சி, வளமை, வாகனம், பணம், வசதி, கலை, ஆகியவற்றின் காரணி கிரகமாக சுக்கிரன் விளங்குகிறார். சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். பிப்ரவரி 12 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். 

இதனிடையே சுக்கிரன் சனி பகவானின் ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் உண்டாகும். அதே சமயம் சில ராசிகளுக்கு ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கி உள்ளது. மேலும் திருவோணம் நட்சத்திரமானது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் நுழைந்திருப்பதால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். எனவே 12 ராசிக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமிக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள்: இவர்களுக்கு எல்லாம் கிடைக்கும், எப்போதும் கிடைக்கும் - உங்களுக்கு எந்த ராசி?

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றி உண்டாகும். சாதனைகள் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள்.

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் வெளியூர் பயணத்தை மேல்கொள்வீர்கள். இந்த பயணங்களாக நிதி ஆதாயம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகும்.

மிதுனம்: சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை மேம்படும். வருமான பெருகும், சம்பள உயர்வை பெறுவீர்கள். 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கலை மற்றும் சினிமா மீது ஆர்வம் அதிகரிக்கும். இந்த துறைகளில் வேலை செய்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் பெரிய அளவில் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களுடன் தகராறு ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம்.

கன்னி: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். கணவருடன் மிகவும் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிபதியான சுக்கிரன் என்பதால், இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள நட்சத்திர பெயர்ச்சி மகிழ்ச்சியை தரும். நிதி ஆதாயம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சுயமாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடனான உறவு மேம்படும். சண்டைகள் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பீர்கள். 

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு பணம் வரவு உண்டாகும். அதேபோல் வேளையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை பெறுவீர்கள். ஆரோக்கியத்த்தில் கவனம் தேவை. வீடு, வாகனம் வாங்கலாம். 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு தொழில் பண லாபம் உண்டாகும். உவினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு உருவழியாக தீர்வு வரும். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும், மேலும் ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்லாம். திருமணம் நிச்சயிக்கப்படும். பொருளாதார நிலை மேம்படும். சொந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்: சுக்கிர நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். பண பலன் அதிகரிக்கும். முதலீட்டு மூலம் ரிஸ்க் எடுக்க வேண்டாம், இதனால் நஷ்டம் ஏற்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Maasi Magam: முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் கிடைத்த நாள்! மாசி மகத்தின் பெருமை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News