விசித்திரமான Run Out -ஆல் வெளியேறிய ஆன்ரே ரஸல்..!

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடி வரும் ஆன்ரே ரஸல், விசித்திரமான ரன் அவுட்டால் வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:41 PM IST
  • பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் ரஸல்
  • விநோதமான ரன்அவுட்டால் வெளியேறிய பரிதாபம்
  • அவரின் ரன்அவுட் வீடியோ இணையத்தில் வைரல்
விசித்திரமான Run Out -ஆல் வெளியேறிய ஆன்ரே ரஸல்..! title=

கிரிக்கெட் போட்டிகளில் விநோதமான முறையில் பல முறை அவுட்டாகி வெளியேறியிருப்பதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆன்ரே ரஸல், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் ரன் அவுட்டான விதம் விநோதத்திலும் விநோதமாக அமைந்துள்ளது. இப்படியொரு ரன்அவுட்டை இதுவரை பார்த்திருக்க முடியாது. கற்பனையில் கூட யோசித்திருக்க மாட்டீர்கள். 

ALSO READ | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..!

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் 2வது போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டாக்கா அணியும், குல்னா டைகர்ஸ் அணியும் மோதின. டாக்கா அணிக்காக விளையாடிய ஆன்ரே ரஸல், கேப்டன் மகமதுல்லாவுடன் களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்டைக்கர் என்டில் இருந்த அவர், பாலை தேர்டு மேன் திசைக்கு தட்டிவிட்டு ரன் ஓடினார். 

ரன் அவுட் சான்ஸ் எடுக்க நினைத்த பீல்டர், தேர்டு மேன் திசையில் இருந்து ஸ்டைக்கர் திசையில் இருக்கும் ஸ்டம்ப் நோக்கி பந்தை வேகமாக வீசினார். மகமதுல்லா வேகமாக க்ரீஸூக்கு ஓடி வந்துவிட்டார். ஆனால், நான் ஸ்டைக்கர் திசைக்கு சென்று கொண்டிருந்த இருந்த ரஸல், பந்து தன்பக்கம் வராது என்ற நினைப்பில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

ALSO READ | IPL Mega Auction 2022: பண மழையில் குளிர்காயும் பாண்டியா-ராகுல்

ஆனால், எதிர்பாராதவிதமாக தேர்டுமேன் வீசிய த்ரோ ஸ்டைக்கர் என்டில் இருக்கும் ஸ்டம்பில் பட்டு நொடிப்பொழுதில் நான்ஸ்டைக்கர் திசை ஸ்டம்புக்கு வந்து அடித்தது. இதனை பேட்ஸ்மேன் ரஸல் மற்றும் பீல்டர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், குல்னா டைகர்ஸ் அணி வீரர்கள் அவுட் கேட்டு முறையிட, டிவி ரீப்ளேவில் ரஸல் அவுட் என தெளிவாக தெரிந்தது. இதனால், விநோதமான சிரிப்புடன் ரஸல் களத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News