உலக தடகள சாம்பியன்ஷிப்பின், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் அன்னு!

தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற இந்திய பெண் ஈட்டி வீசுபவர் அன்னு ராணி திங்களன்று தனது சொந்த சாதனையை முறியடித்தார். 

Last Updated : Oct 1, 2019, 03:07 PM IST
உலக தடகள சாம்பியன்ஷிப்பின், இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் அன்னு! title=

தோஹாவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற இந்திய பெண் ஈட்டி வீசுபவர் அன்னு ராணி திங்களன்று தனது சொந்த சாதனையை முறியடித்தார். 

27 வயதான அன்னு, தனது இரண்டாவது சுற்று வீசுதலில் 62.43 மீட்டர் தூரம் எறிந்தார், இதன்மூலம் மார்ச் மாதத்தில் அவர் அடைந்த 62.34 மீட்டர் தேசிய சாதனையை அவரே கடந்துள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை அன்னு பெற்றுள்ளார். குழு A-ல் மூன்றாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார் மற்றும் தகுதிச் சுற்றில் ஐந்தாவது சிறந்த போட்டியாளராகவும் இருந்தார்.

ஆசிய சாம்பியனான சீனாவைச் சேர்ந்த லியு ஹுஹுய் (67.27 மீ) மற்றும் ஜெர்மனியின் கிறிஸ்டின் ஹுசோங் ஆகியோர் 63.50 மீட்டர் தானியங்கி தகுதித் தொகையைத் தாண்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அன்னு மற்றும் மேலும் 9 போட்டியாளர்கள் உள்பட 12 பேர் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள்.

தனது முதல் வீசுதலில், அன்னு 57.05 மீ தூரத்தைத் தொட்டார், அதே நேரத்தில் தனது மூன்றாவது மற்றும் இறுதி வீசுதலில் 60.50 மீ எறிந்தார். குழு A-யில், ஆசிய விளையாட்டு சாம்பியனான சீனாவின் லியு ஷியிங் (63.48 மீ) மற்றும் ஸ்லோவேனியாவின் ரதேஜ் மார்டினா (62.87 மீ) தூரத்தை எட்டி அன்னுவை விட முன்னேறினர்.

திங்களன்று போட்டியிட்ட மற்ற இரண்டு இந்திய விளையாட்டு வீரர்கள், அர்ச்சனா சுஷீந்திரன் மற்றும் அஞ்சலி தேவி முறையே பெண்கள் 200 மீ மற்றும் 400 மீட்டர் ஓட்டங்களில் முதல் சுற்றை தவிர முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News