BCCI: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா! ஒமிக்ரான் பாதிப்பா?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் சிகிச்சை;  இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 06:59 AM IST
BCCI: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரொனா!  ஒமிக்ரான் பாதிப்பா? title=

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கொல்கொத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கங்குலியின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். இந்திய அணியின் (Team India) முன்னாள் கேப்டன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைசுற்றல் மற்றும் வாந்தி எடுத்ததால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டார். நாட்டில் ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வரும் நேரத்தில் கங்குலிக்கு கொரோனா என்ற செய்தி வந்துள்ளது. கிரிக்கெட் உலகில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள சவுரவ் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சமீபத்தில், கங்குலி பல்வேறு சர்ச்சைகளில் இடம் பெற்றிருந்தார். டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலி கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். கங்குலி சொன்னது தவறு என்றும், அப்படி எதையும் அவர் சொல்லவில்லையும் என்று கோஹ்லி தெரிவித்தது, கங்குலியை விமர்சனங்களில் சிக்க வைத்தது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட்டை உலுக்கிய மேட்ச் பிக்சிங் ஊழலுக்குப் (match-fixing scandal) பிறகு அணியை மீண்டும் வடிவமைத்த பெருமையைப் பெற்றவர்.  

Also Read | அமெரிக்க கிரிக்கெட்டுக்கு செல்லும் மற்றொரு இந்திய வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News