தடுமாறும் இங்கிலாந்து!! சாதனை செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு?

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்தில் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 3, 2018, 06:03 PM IST
தடுமாறும் இங்கிலாந்து!! சாதனை செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு? title=

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டியை அடுத்து தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி பிரிமிக்ஹான் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸ் விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 149(225) ரன்கள் குவித்து வெளியேறினார்.

 

இதனையடுத்து 13 ரன்கள் முன்னிலை பெற்று, தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியது இங்கிலாந்து அணி. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. 

 

மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்தில் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

 

இன்றைய ஆட்டம் முடிய இன்னும் கிட்டத்தட்ட 25 ஓவர்கள் இருக்கிறது. 100 ரன்களுக்கு இங்கிலாந்தில் அணியின் அனைத்து விக்கெட்டையும் இந்தியா பறித்து விட்டால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். 

தற்போது வரை இந்திய தரப்பில் (இரண்டாவது இன்னிங்க்ஸ்) இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் தலா மூன்று விக்கெட் எடுத்துள்ளனர். 

Trending News