மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்க்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

Last Updated : May 2, 2019, 07:33 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணியை பழிதீர்க்குமா சன் ரைசர்ஸ் ஐதராபாத்! title=

07:31 PM 02-05-2019
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!


2019 தொடரின் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன!

IPL 2019 தொடரின் 51-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளா ஆப் இடத்திற்கான தனது இருப்பினை உறுதி செய்துவிடும். அதேப்போல் 12 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் தோற்றால், தனது ப்ளே ஆப் இடத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுடன் போட்டியிட வேண்டி இருக்கும்.

சன் ரைசர்ஸ் அணியின் ரன் மெஷின் டேவிட் வார்ணர் தாயகம் திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. வெறும் 12 இன்னிங்ஸில் 1 சதம் 8 அதை சதம் என 692 ரன்கள் குவித்து அனைவரையும் கதி கலங்க வைத்துள்ள அதிரடி நாயகனுக்கு இணையாக ஒரு வீரரை கண்டுபிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் ஐதராபாத் அணி வீரர்கள் அப்படி ஒரு வீரரை இன்று களமிறக்கவுள்ளனர்.  டேவிட் வார்ணருக்கு பதிலாக மார்ட்டின் குப்திலை களமிறக்கவுள்ளனர்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 6-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 136 ரன்கள் குவித்த மும்பை அணி ஐதராபாத் அணியை 96 ரன்களில் சுருட்டியது. அன்றைய போட்டியில் இரு அணிகள் பக்கமும் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கி இருந்தது. அதே நிலை இன்றைய போட்டியிலும் தொடருமா என்பது கேள்வி குறி தான். 

Trending News