ராகுல் மற்றும் பாண்டியாவுக்கு சிக்கல் - ஒருநாள் போட்டியில் விளையாட தடை?

ஹர்திக் பாண்டியா மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் இருவருக்கும் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 10, 2019, 03:28 PM IST
ராகுல் மற்றும் பாண்டியாவுக்கு சிக்கல் - ஒருநாள் போட்டியில் விளையாட தடை? title=

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அதில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது. கேள்விகளுக்கு இருவருமே பதில் அளித்தனர். அப்பொழுது பெண்களை பற்றி சில கருத்துகளை வெளியிட்டார் ஹர்திக் பாண்டியா. இவரின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தது. பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மீது, இந்த விமர்சனங்களுக்கு பிரதிபலிக்கவில்லை. சமூக வலைதளத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. 

இதனையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஹர்திக் பாண்டியா. மேலும் என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறினார்.

ஆனாலும், ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பதில் அளிக்குமாறும் கூறியுள்ளது.

இதனையடுத்து "தனது செயலுக்கு வருத்தம் தெரிவிகிறேன். இனிமேல் இது போன்று சம்பவம் எதிர்காலத்தில் நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறேன்" என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நோட்டீசுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

இதுக்குறித்து பேசிய கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டித் தலைவர் வினோத் ராய், சர்ச்சைக்குறிய கருத்து குறித்து ஹர்திக் பாண்டியா எங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவரின் விளக்கம் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே அவர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்குமாறு பரிந்துரை செய்துள்ளேன். எனது பரிந்துரையின் இறுதிமுடிவை எடுக்கும் அதிகாரம் பிசிசிஐயின் சட்டக்குழுவிற்கு தான் உள்ளது. அவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள்.

Trending News