தொடரும் சோகம்..!! உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா

கால் இறுதியில் தோற்றதன் மூலம் 14 வது உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 08:58 PM IST
தொடரும் சோகம்..!! உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறிய இந்தியா title=

இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் 4_வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய அணி 11 உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ளது. ஆனால் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. 

இது உலக கோப்பை வரலாற்றில் ஏழாவது முறையாக நெதர்லாந்துடன் மோதிய இந்திய அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. ஹாக்கி உலகக் கோப்பையில் நெதர்லாந்தை ஒருபோதும் இந்திய அணியால் வெல்ல முடிந்ததில்லை. 

கால் இறுதியில் தோற்றதன் மூலம் 14 வது உலக கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.

 


கடந்த நவம்பர் 28 ஆம் தேதி உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் புவனேஷ்வரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கால் இறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிக்கொள்கிறது இந்திய அணி.

உலகக் கோப்பை ஹாக்கித் தொடரை பொருத்த வரை, இந்திய அணி ஒரே ஒரு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. அது 1975 ஆம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு இந்திய அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை என்பது வருத்தம். இம்முறை மன்ப்ரீத் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, வலிமை வாய்ந்த நெதர்லாந்து அணியை வீழ்த்தி 43 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகக் ஹாக்கி கோப்பை நெதர்லாந்து அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் ஆறு முறை மோதியுள்ளன. ஐந்து முறை நெதர்லாந்து அணி வென்றுள்ளது. ஒரு முறை ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை இந்திய அணி, நெதர்லாந்து அணியை வீழ்த்தியது கிடையாது.

 

ஹாக்கி போட்டியை பொருத்த வரை இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் 105 முறை மோதியுள்ளன. அதில் இந்திய அணி 33 முறையும், நெதர்லாந்து அணி 48 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 24 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளது. ஹாக்கி போட்டி தரவரிசை படி, நெதர்லாந்து 4_வது இடத்திலும், இந்தியா 5_வது இடத்திலும் உள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட கால் இறுதி ஆட்டத்தில், நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இங்கிலாந்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல நேற்று நடைபெற்ற இரண்டாது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில், முதலில் ஜெர்மனி - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது இந்தியா - நெதர்லாந்து மோதுகின்றன.

 

 

Trending News