ஆசியக்கோப்பை 2022; சச்சினின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக முறை பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 21, 2022, 07:03 PM IST
  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி
  • சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா
ஆசியக்கோப்பை 2022; சச்சினின் சாதனையை முறியடிக்கப்போகும் ரோகித் title=

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 28 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அதுவும் சச்சின் தெண்டுல்கர் வசம் இருக்கும் சாதனையை அவர் தகர்க்க இருக்கிறார்.

மேலும் படிக்க | ஷாகீன் அப்ரிடி விலகலால் இந்தியா நிம்மதி; வக்கார் யூனிஸ் கிண்டல் - ரசிகர்கள் பதிலடி

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை சச்சின் மற்றும் ரோகித் சர்மா முறையே 6 முறை பங்கேற்றிருக்கிறார்கள். எதிர்வரும் ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் விளையாடும்போது அது அவருக்கு 7 தொடராக இருக்கும். இதன் மூலம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக முறை விளையாடியவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துவிடுவார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜடேஜா மற்றும் தோனி, முகமது அசாரூதீன் ஆகியோர் தலா 5 முறை ஆசியக்கோப்பையில் பங்கேற்று விளையாடி இருக்கின்றனர்.  

விராட் கோலி ,கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, சித்து ஆகியோர் தலா நான்கு முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றனர். ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெயசூர்யா வசம் இருக்கிறது. அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இருக்கிறார். இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை ஆசியக்கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒருமுறை கூட ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளவில்லை. 

மேலும் படிக்க | டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘Bazball’ யுக்தி; இங்கிலாந்து அணியின் புது வியூகம் எடுபடுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News