தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்த அக்சர் படேல்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து, இந்திய அணியை வெற்றி பெற செய்தார் அக்சர் படேல்.   

Written by - RK Spark | Last Updated : Jul 25, 2022, 12:57 PM IST
  • 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
  • அக்சர் படேல் அதிரடியாக ஆடி ரன்களை அடித்தார்.
  • தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் அக்சர் படேல்.
தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்த அக்சர் படேல்! title=

பரபரப்பான கடைசி ஓவர் த்ரில்லரில் அக்சர் படேல் சிக்ஸர் மூலம் இந்திய அணியை வெற்றி பெற செய்து, தொடரையும் கைபற்ற உதவியுள்ளார்.  இதன் மூலம் MS தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் அக்சர் படேல்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஷாய் ஹோப்பின் சதமும், கேப்டன் நிக்கோலஸ் பூரனின் 74 ரன்கள் அடித்தும் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்தது.  அதிவேக அரை சதத்தை அடித்த அக்சர் படேல், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 312 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற செய்தார்.  

மேலும் படிக்க | IND vs WI முதல் போட்டியிலேயே திக் திக்! 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 18வது ஓவரில் 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் (63) மற்றும் சஞ்சு சாம்சன் (54) இருவரும் அரைசதங்கள் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர்.  தீபக் ஹூடா (33) மற்றும் அக்ஸர் ஆகியோர் விரைவான ரன்கள் அணிக்கு உதவியது.  35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல், ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் நீண்ட கால சாதனையை அக்சர் முறியடித்தார். ஐந்து சிக்ஸர்கள் அடித்த படேல், ஒருநாள் போட்டியில் சேஸிங்கில் 7வது இடத்தில் இறங்கி அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்துள்ளார்.  2005-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தோனி மூன்று சிக்ஸர்களைப் பதிவு செய்திருந்தார். யூசுப் பதான் 2011-ல் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

 

"இது எனக்கு ஒரு சிறப்பான தருணம் என்று நான் நினைக்கிறேன். மேலும் இது ஒரு முக்கியமான நேரத்தில் வந்தது, மேலும் தொடரை வெல்ல அணிக்கு உதவியது. எனது அணிக்காக இதுபோன்று தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்," என்று போட்டிக்குப் பிறகு அக்சர் கூறினார்.  மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.

மேலும் படிக்க | ஹீரோவான அக்சர் படேல்! புதிய சாதனை படைத்த இந்திய அணி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News