ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது!
14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி புவனேஸ்வரின் கலிங்கா விளையாட்டரங்களில் நேற்று துவங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரில் C பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் நேற்றைய தினம் தங்களது முதல் லீக் போட்டியில் விளையாடின.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த இந்திய அணி ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் தனது முதல் கோலினை பதிவு செய்தது. அக்ஷ்தீப் சிங் முயற்சியால் ஆட்டதிதன் 12-வது நிமிடத்தில் இரண்டாவது கோல் பதிவானது. முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது.
பின்னர் ஆட்டத்தின் இரண்டாவது பாதிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்த இந்தியா இறுதி நிலையினை எட்டியபோது 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றியினை தனதாக்கிக் கொண்டது.
இதனையடுத்து தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.