இந்திய அணி ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான்: வரலாற்றில் முதல்முறை

இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தான் என்ற வாசகம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இடம்பிடித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 10, 2023, 07:13 PM IST
  • பாகிஸ்தான் வாசகம்
  • இந்திய அணி ஜெர்சியில்
  • ரசிகர்களின் வியப்பு
இந்திய அணி ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான்: வரலாற்றில் முதல்முறை title=

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி நடத்துக்கிறது. அந்நாட்டில் நடத்த பாகிஸ்தான் அணி பகீரத முயற்சிகள் எடுத்தப்போதும், இந்திய அணி அங்கு வராது என்று தீர்மானமாக இருந்ததால் வேறு நாட்டில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்தியா விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தரப்பிலும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. அதில் ஒன்று தான் ஆசியக்கோப்பை விளையாடும் அணிகளின் ஜெர்சியில் பாகிஸ்தான் வாசகம் இருக்க வேண்டும் என்பது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது.

மேலும் படிக்க | டீம் இண்டியாவை வீழ்த்தி ODI உலகக்கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! பாக் வீரர் கணிப்பு

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான விளம்பரத்தில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி அணிந்திருக்கும் இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கலந்த வியப்பு. வரலாற்றிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் அணியின் முத்திரை இடம்பெற்றதில்லை. ஒருவேளை பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டிருந்தால் இந்த வாசகம் இந்திய அணியின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்காது. அங்கு நடைபெறாமல் போனதால் பின்னாளில் இப்போது நடத்தப்படும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது யார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் அணி தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை ஆசியக்கோப்பை கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறன்றன. இந்த முறை ஆசியக் கோப்பைத் தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறுகிறது. தொடரை நடத்தும் பாகிஸ்தானில் நான்கு போட்டிகள், மற்ற போட்டிகள் அனைத்தும் இலங்கையிலும் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெற இருக்கிறது. 

மொத்தம் 13 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அட்டவணையில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஆகிய மூன்று அணிகளும், பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் இடம்பெறுகின்றன. முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் அணிகள் தங்களுக்குள் ஒரு ஆட்டத்தில் மோதிக்கொள்ளும். இதில் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இந்தப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.

ஆசியக் கோப்பை தொடரில் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையே முல்தான் மைதானத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி பல்லேகெலே மைதானத்தில் இலங்கையில் நடக்கிறது.

மேலும் படிக்க | 2023ல் அதிக தனிநபர் ஒருநாள் ஸ்கோரைப் பெற்ற டாப் 10 பேட்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News