மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மொகாலியில் நடந்த 3-வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டு இழப்புக்கு 288 ரன்கள் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னுடனும், பட்லர் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியதும். ஆட்டம் தொடங்கிய முதல் அஷ்வின் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினார்கள். கடைசியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் தனது முதல் இன்னிங்சில் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் நிதானமாக விளையாட லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால், அணியின் ஸ்கோர் 39 ரன்னாக இருக்கும்போது ராகுல் 24 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்தியா 52 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முரளி விஜய் 70 ரன்னுடனும், புஜாரா 47 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
At Stumps on Day 2 of the 4th Test, #TeamIndia are 146/1, trail ENG (400) by 254 runs (Vijay 70*, Pujara 47*) #INDvENG pic.twitter.com/zGADA8fl0y
— BCCI (@BCCI) December 9, 2016