17:16 18-12-2019
இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 159(138) மற்றும் லோகேஷ் ராகுல் 102(104) இருவரின் சதம் மூலம் அதிக ரன்களை எதிர் அணிக்கு இலக்காக தர முடிந்தது. அதன் பிறகு வசந்தவந்த கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் இல்லாமல் வெளியேறினார்.
பிறகு களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) நன்றாகவும், அதிரடியாகவும் ஆடி அரை சதம் அடித்து 53(32) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் விக்கெட் கீப்பட் ரிஷப் பந்த் (Rishabh Pant) 39(16) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியாக இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 388 ரன்கள் தேவை.
15:57 18-12-2019
ரோகித் சர்மா சதத்தை அடித்ததை அடுத்தது, தொடக்க வீரர் லோகேஷ் ராகுலும் சதம் அடித்துள்ளார். இது அவரின் ஒருநாள் போட்டியில் மூன்றாவது சதமாகும்.
15:54 18-12-2019
இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 107 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல்* 94(96) சதம் அடிக்க 6 ரன்கள் தூரம் உள்ளார்.
15:39 18-12-2019
முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித்* 84(96) மற்றும் ராகுல்* 90(90)அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி விளையாடி வருகின்றனர். இந்திய அணி 31 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்துள்ளது.
KL Rahul and Rohit Sharma partnerships:
KL Rahul and Rohit Sharma partnerships:
When these two get in they go big #INDvWI pic.twitter.com/OGgY86GbXy
— ICC (@ICC) December 18, 2019
விசாகப்பட்டினம்: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு (India vs West Indies) இடையிலான மதியம் 1.30 மணி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் (Vizag ODI) மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியை குறித்து பேசிய கேப்டன் விராட் கோஹ்லி, "இது மிகவும் கடினமான ஆடுகளம் மற்றும் நாங்கள் முதலில் பீல்டிங் செய்ய விரும்பினோம். டாஸ் யார் பக்கம் வேணுமாலும் விழலாம். அதனால் எச்சரிகையாக அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது அவர்களுக்கு சாதகமாக டாஸ் வந்துள்ளது. டாஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பட்சத்தில், முதலில் பேட்டிங் செய்ய வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் இன்னிங்ஸில் நிறைய ரன்கள் இருக்க வேண்டும் எனக் கூறினார்.
West Indies have won the toss and elect to bowl first in the 2nd ODI against #TeamIndia.#INDvWI pic.twitter.com/FoCg4VGxTe
— BCCI (@BCCI) December 18, 2019
இன்று (டிசம்பர் 18) நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை (West Indies) எதிர்கொள்ளும் போது இந்தியா அணியின் பந்து வீச்சாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற அவருக்கு வாய்ப்பு உள்ளது. மறுபுறம், இந்திய அணியை (Team India) பொறுத்த வரை இரண்டாவது ஒருநாள் போட்டி "டூ ஆர் டை" என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். எனவே விசாகப்பட்டினம் (Visakhapatnam ODI) ஒருநாள் போட்டி அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டி தொடரின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும்.
இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானது. 13 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அந்த சிக்கலை தகர்த்து 10 வது முறையாக அந்த அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி தொடர்ந்து ஒன்பது தொடர்களை கைப்பற்றியுள்ளது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களம் கண்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி ஆட்டத்தின் 47.5-வது ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.