தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் செய்னா!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்!

Updated: Aug 2, 2019, 07:46 AM IST
தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றில் வெளியேறினார் செய்னா!

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல், ஜப்பானின் சயாகா டகாஹஷியை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 11-21 என இழந்தார். 
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 14-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய செய்னா 21-16, 11-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-11, 16-21, 12-21 என, தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 9-21, 14-21 என, சீனதைபேயின் சோ டியன் சென்னிடம் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் சாய் பிரனீத் 21-18, 21-19 என, சகவீரர் சுபாங்கர் தேயை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் பிரன்னாய் 17-21, 10-21 என, ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் வீழ்ந்தார்.