2வது ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்..!

இந்திய ஜூனியர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்த ரிஷப்பன்ட், முதன்முறையாக இந்திய சீனியர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 9, 2022, 02:35 PM IST
  • இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி
  • ரோகித்துடன் களமிறங்கிய ரிஷப் பன்ட்
  • இந்திய U19 வீரர்கள் போட்டியை நேரில் ரசிக்கின்றனர்
2வது ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த்..!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியில் ஓபனிங் இறங்கிய இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் உடல் நலக்குறைவால் பொல்லார்டு விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஓடியோன் ஸ்மித் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டார்.

மேலும்படிக்க | வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லுமா இந்தியா? பிளேயிங் 11..!

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்பிரைஸாக ரிஷப் பந்த் ரோகித்துடன் களமிறங்கினார். ரோகித் - தவான், ரோகித் - கே.எல்.ராகுல் ஓபனிங் ஜோடியாக இருந்த நிலையில், இப்போது புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் 2016 ஆம் ஆண்டு இந்திய U19 அணியில் விளையாடியபோது ஓபனிங் பேட்ஸ்மேனாக இருந்தார்.

சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சீனியர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்திய சீனியர் அணிக்கு அறிமுகமானது முதல் அவர் பின்வரிசை ஆட்டக்காரராக, அதாவது பினிஷர் இடத்தில் ஆடி வந்தார். இப்போது ஓபனிங் அட வந்திருப்பதால், மிடில் ஆர்டருக்கு கே.எல்.ராகுல் மாற்றப்பட்டுள்ளார். பினிஷர் இடத்தில் தீபக் ஹூடா அல்லது சூர்யகுமார் யாதவ் விளையாட இருக்கிறனர். இதனிடையே, அண்மையில் U19 உலக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் அகமதாபாத் ஒருநாள் போட்டியை நேரில் ரசிக்கின்றனர். 

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் மூலம் கம்பேக் கொடுப்பாரா நடராஜன்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News