இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா போராடி வெற்றிப் பெற்றது!
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இத்தொடரின் 3வது டி20 போட்டி இன்று ஜொனஸ்பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது. போட்டியில் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்தியா பின்னர் தடுமாறியது, இதனால் 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 19 ஓவர் முடிய 5 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி இலக்கினை எட்டியது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லூஸ் 41(34), ட்ராய்ன் 34(15) ரன்கள் எடுத்தனர். இதனால் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் 2-1 என்ற கணக்கில் இருப்பதால் இந்தியா அணி முன்னிலை வகித்து வருகிறது!
3rd T20I : SA - 134/5 in 19 overs vs India - 133/10
South Africa win by 5 wickets #SAvIND— BCCI Women (@BCCIWomen) February 18, 2018