ஐபிஎல் 2017, போட்டி 43: இரவு 8 மணிக்கு பெங்களூரு - பஞ்சாப் பலப்பரீட்சை

Last Updated : May 5, 2017, 05:30 PM IST
ஐபிஎல் 2017, போட்டி 43: இரவு 8 மணிக்கு பெங்களூரு - பஞ்சாப் பலப்பரீட்சை title=

இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 11 ஆட்டத்தில், 8 தோல்வி, 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெற பெங்களூரு அணி முயற்சிக்கும். 

பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 5 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இவற்றில் 4-ல் வெற்றியை பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), டேவிட் மில்லர், மனன்வோரா, அக் ஷர் படேல், குர்கீரத் சிங், அனுரீத் சிங், சந்தீப் சர்மா, ஷான்மார்ஷ், விருத்திமான் சாஹா, நிகில் நாயக், மோகித் சர்மா, மார்க்ஸ்ஸ்டோனிஸ், கே.சி.கரியப்பா, அர்மான் ஜாபர், பிரதீப் ஷாகு, ஸ்வப்னில்சிங், ஹசிம் ஆம்லா, மோர்கன், ராகுவல் டிவாட்டியா, நடராஜன், மேட்ஹென்றி, வருண் ஆரோன், மார்ட்டின் குப்தில், டேரன் சமி, ரிங்கு சிங்.

Trending News