ஐபிஎல்2017: 5வது லீக் போட்டி- பெங்களூரு மற்றும் டெல்லி பலப்பரீட்சை

Last Updated : Apr 8, 2017, 07:46 PM IST
ஐபிஎல்2017: 5வது லீக் போட்டி- பெங்களூரு மற்றும் டெல்லி பலப்பரீட்சை title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட் அணிகள் மோதின. 

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு புனே அணி 163 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி 164 ரன் இலக்கு கொடுக்கப் பட்டுள்ளது. வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடிய பஞ்சாப் அணி 19 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஹைதராபாத்திடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஜாகீர்கான் தலைமையில் களமிறங்கும் டெல்லி டேர்டேவில்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை ஆட உள்ளது.

பெங்களூரு அணி: ஷான் வாட்சன் (கேப்டன்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

டெல்லி அணி: ஜாகீர்கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ்மோரிஸ், கருண் நாயர், பிரதியுஸ் சிங், ரிஷப் பந்த், சேம் பில்லிங்ஸ், சஞ்சு சேம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

 

 

 

Trending News