IPL 2020 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்;

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 17, 2020, 07:39 PM IST
IPL 2020 CSK vs DC: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்; title=

சென்னை vs டெல்லி: நேரடி புதுப்பிப்பு


7:17 PM 10/17/2020
இரண்டு அணிகளிலும் விளையாடக்கூடிய 11 வீரர்களின் விவரங்கள்!!

 

 


7:07 PM 10/17/2020
இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் 34 வது ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

 

Delhi Capitals vs Chennai Super Kings; Preview: மகேந்திர சிங் தோனியின் திறமையான கேப்டன்சிப் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது, ஆனால் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்தியன் பிரீமியர் லீக்கின் 34 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியை தோற்கடித்தே ஆக வேண்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் கடுமையான சவாலை CSK எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் தோனி சரியான வியூகம் அமைத்ததால் வெற்றி பெற முடிந்தது. மேலும் சீசனில் தங்கள் அணியை தக்க வைத்துக் கொள்ள டெல்லிக்கு எதிரான இதேபோன்ற ஆட்டத்தைக் காட்ட தோனி மற்றும் அவரது அணி முயற்சிக்கும்.

சாம் கரனை (Sam Curran) தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினாலும் அல்லது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் உட்பட ஏழு பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடித்தாலும், தோனியின் ஒவ்வொரு தந்திரமும் முந்தைய போட்டியில் வெற்றிகரமாக இருந்தது.

தோனி லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவிடம் இருந்து ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீச வைத்தார். அதுவும் 16 வது ஓவரில், ரவீந்திர ஜடேஜா மற்றும் கரன் சர்மா மீது அதிக நம்பிக்கையை காட்டினார். 

ஷார்ஜா மைதானத்தில் (Sharjah Cricket Stadium) விக்கெட் எடுக்க சென்னை மீண்டும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்குவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளன. ஷார்ஜாவில் சுழற்பந்து பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் சிறந்த செயல்திறனால் அணிகள் வென்றதற்கு காரணமாக கடைசி இரண்டு போட்டிகளும் இருந்தன.

ALSO READ |  ‘CSK-வை ஒரு Government Job போல் நினைக்கிறார்கள்’ வீரர்களின் மெத்தனத்தை சுட்டிக்காட்டிய Sehwag

டெல்லியைப் (Delhi Capitals) பொறுத்தவரை, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் என்ரிச் நார்ட்ஜே ஆகியோர் பந்துவீச்சை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நார்ட்ஜே 156.2 கிமீ வேகத்தில் பந்து வீசினார். மேலும் கூட சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர் அஸ்வின் மற்றும் அக்ஷர் படேல் உள்ளனர. 

எவ்வாறாயினும், முந்தைய போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் (Shreyas Iyer) உடற்தகுதி குறித்து டெல்லி அணி கவலை கொண்டுள்ளது. அவர் தற்போது நல்ல உடற்தகுதி பெற்றுள்ளார். மேலும் அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். டெல்லி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் (Rishabh Pant) ஏற்கனவே காயம் காரணமாக வெளியில் உள்ளார். திறமையான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரிடமிருந்து அணி நல்ல தொடக்கத்தை எதிர்பார்க்கும். ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை என்றால், அஜின்கியா ரஹானே மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பொறுப்பும் நடுத்தர வரிசையில் அதிகரிக்கும்.

ALSO READ |  IPL 2020: ‘திரும்பி வா சின்ன தல’ Suresh Raina-ஐ அழைக்கும் CSK fans!!

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings): மகேந்திர சிங் தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பதி ராயுடு, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, லுங்கி என்ஜிடி, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஜோஷ்லே தாஹிர் .

டெல்லி கேப்பிடல் (Delhi Capitals): ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், பிருத்வி சாவ், சிம்ரான் ஹெட்மியர், ககிசோ ரபாடா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், சந்தீப் லாமிச்சேன், கெமோ பால், டேனியல் சைம்ஸ் , அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), அவேஷ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News