அனுஷ்கா-விராட் குறித்த சுனில் கவாஸ்கரின் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2020) வியாழக்கிழமை, விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் கே.எல்.ராகுலின் (KL Rahul) கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவற்றுக்கு இடையிலான போட்டி நடந்தது. விராட் கோஹ்லி அன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடவில்லை. பீல்டிங்கின் போது பல கேட்சுகளை கோட்டை விட்டதோடு, ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து, அவௌட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார்.
விராட் கோலியின் ஆட்டம் குறித்து பேசிய வர்ணனையாளர் சுனில் கவாஸ்கர், விராட் நல்ல ஃபார்மில் இல்லை என கருத்து தெரிவித்ததோடு, அவரது மனைவி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா குறித்த ஒரு கருத்தையும் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் இப்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். .
தன்னைப் பற்றி சுனில் கவாஸ்கர் கூறியது குறித்து அனுஷ்கா சர்மாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நடிகை சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து, சுனில் கவாஸ்கர் ஏன் தனது பெயரை கிரிக்கெட்டில் இழுக்க வேண்டும் என, ட்விட்டரில் அனுஷகா கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க | IPL 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்...இரண்டாவது வெற்றி யாருக்கு?
"மிஸ்டர் கவாஸ்கர், உங்கள் கருத்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது." விளையாட்டின் போது ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால், ஒரு மனைவி தான் பொறுப்பு என ஏன் நினைத்தீர்கள் ' என அனுஷ்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
மரியாதைக்குரிய திரு கவாஸ்கர், நீங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த விளையாட்டில் ஜென்டில்மேன் என்று பெயரிடப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் இதைச் சொன்னபோது நான் மிகவும் மன வருந்தினேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ' என அவர் ட்விட்டரில் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க | உலகக்கோப்பை வாங்கித் தந்த தல தோனியின் "Sixer ball" இப்ப எங்கே இருக்கு தெரியுமா..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR