Live IPL 2020 CSK vs MI: சென்னை 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள்

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 23, 2020, 10:17 PM IST
Live IPL 2020 CSK vs MI: சென்னை 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் title=

9:15 PM 10/23/2020
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அதிகட்சமாக சாம் குர்ரன் 52(46) ரன்கள் எடுத்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 

மும்பை அணி வெற்றி பெற 115 ரன்கள் தேவை.

 

 


8:47 PM 10/23/2020
எட்டாவது விக்கெட்டை இழந்தது சென்னை. சர்துல் தாக்கூர் 11 ரன்னில் அவுட்.


8:16 PM 10/23/2020
அடுத்த விக்கெட்; தீபக் சாஹர் 5 பந்து சந்தித்து 0 ரன்னில் அவுட். ஏழாவது விக்கெட்டை இழந்தது சென்னை.


8:06 PM 10/23/2020
கேப்டன் தல தோனி அவுட். 16 ரன்கள் எடுத்து அவுட். ஆறாவது விக்கெட்டை இழந்தது சென்னை.


7:59 PM 10/23/2020
ஐந்தாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி; ரவீந்திர ஜடேஜா 7 ரன் எடுத்து அவுட் ஆனார்.


7:46 PM 10/23/2020
நான்காவது விக்கெட்டை இழந்த சென்னை அணி; ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.


7:40 PM 10/23/2020
மூன்றாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி; என் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.


7:39 PM 10/23/2020
இரண்டாவது விக்கெட்டை இழந்த சென்னை அணி; அம்பதி ராயுடு 2 பந்தில் 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.


7:34 PM 10/23/2020
முதல் விக்கெட்டை இழந்த சென்னை அணி; ருதுராஜ் கெய்க்வாட் 5 பந்தை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் lbw அவுட் ஆனார்.


7:10 PM 10/23/2020
இரண்டு அணிகளிலும் விளையாடும் 11 வீரர்களின் விவரங்கள்!!

 

 


7:01 PM 10/23/2020
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் ஆரம்பமாக உள்ளது.

 

 


IPL 2020, CSK vs MI Live Cricket: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனின் 41 வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) இடையே ஷார்ஜாவில் நடைபெறுகிறது. சென்னையைப் பொறுத்தவரை, இந்த ஆட்டம் வாழ்வா அல்லது சாவா என்பது போல இருக்கும். அதே நேரத்தில், மும்பை அணி இந்த போட்டியில் வென்று புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தை அடைய விரும்பும்.

சென்னை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இது தவிர, IPL 2020 தொடரின் மீதமுள்ள அணிகளின் செயல்திறனை பொறுத்தே சென்னையின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். அதே நேரத்தில், சிறப்பாக விளையாடி வரும் மும்பை, பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதி. 

செப்டம்பர் 19 அன்று, ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை (Mumbai Indians) தோற்கடித்தது. அபுதாபியில் விளையாடிய இந்த போட்டியில், மும்பை முதலில் பேட்டிங் செய்து சென்னைக்கு 163 ரன்கள் இலக்கை கொடுத்தது. அதற்கு பதிலடி அளித்த சென்னை 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்றது.

ALSO READ |  2008 முதல் 2019 வரை சென்னை சூப்பர் கிங்ஸின் பயணம்! 2020-ல் எப்படி? ஒரு அலசல்

இந்தியாவில், இன்றைய போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி போன்ற சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஐபிஎல் போட்டிகள் ஆன்லைனில் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் ஒளிபரப்பப்படும். 
மும்பை மற்றும் சென்னை மிகவும் வெற்றிகரமான அணிகள்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆகியவை லீக் போட்டி வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருந்துள்ளது. இதுவரை நடைபெற்ற 12 தொடர்களில் இந்த இரு அணிகளும் 7 முறை பட்டத்தை வென்றுள்ளன. மும்பை அதிகமாக நான்கு முறை மற்றும் சென்னை மூன்று முறை சாம்பியன் படத்தை (IPL Champions) வென்றுள்ளது. மும்பை முதன்முதலில் ஐ.பி.எல். இதன் பின்னர், 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் இந்த அணி சாம்பியனானது.

Trending News