IPL 2020 MI vs RCB: பிளேஆஃப் சுற்றுக்கு முதலில் செல்வது யார்? மும்பை vs பெங்களூரு

இன்றைய 48 வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 28, 2020, 07:16 PM IST
IPL 2020 MI vs RCB:  பிளேஆஃப் சுற்றுக்கு முதலில் செல்வது யார்? மும்பை vs பெங்களூரு  title=

7:12 PM 10/28/2020
இரண்டு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த பட்டியல்!

 

 


7:07 PM 10/28/2020
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

 

 


IPL 2020 MI vs RCB Score Updates: இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020 ) இன் 48 வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் போட்டி நடைபெறும். இருவரும் இந்த சீசனில் இதுவரை 11-11 போட்டிகளில் விளையாடி 7-7 போட்டிகளில் வென்றுள்ளனர். இருப்பினும், நிகர ரன்-ரேட் அடிப்படையில் மும்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், பிளேஆஃப் சுற்று தகுதி உறுதி செய்யப்படும். முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மும்பை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில், விராட் கோலி தலைமையிலான ஆர்.சி.பி. அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியை சந்தித்தது.

இந்த சீசனில் இருவருக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இதுவாகும். இருவருக்கும் இடையிலான கடைசி போட்டி செப்டம்பர் 28 அன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் வென்றது. அந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. மும்பையும் 5 விக்கெட் இழப்பில் 201 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் மும்பை ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் பெங்களூரு விராட் கோலி தனது அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

ஆட்டத்தை எங்கு காணலாம்?
ஐபிஎல் 2020 டிசி Vs ஆர்ஆர் லைவ் மேட்ச் ஸ்ட்ரீமிங்: போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் பல்வேறு சேனல்களில் காணலாம் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி). போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங் டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலிலில் நீங்கள் பார்க்கலாம். 

அபுதாபி மைதானத்தில் எப்படி?
அபுதாபியில் உள்ள இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 44 டி 20 போட்டிகள் விளையாடியுள்ளன. இந்த 19 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் 25 ல் முதலில் பந்து வீசிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில், முதல் இன்னிங்சில் அணியின் சராசரி ரன் மதிப்பு 137 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸில் அணியின் சராசரி 128 ரன்களாகவும் உள்ளது.

Trending News