IPL தொடக்க விழா நிதி CRPF-க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது!

இன்று துவங்கிய IPL 2019 தொடரின் தொடக்க விழா நிதியினை இந்திய ஆயுதப்படைக்கு அளிக்க BCCI முன்வந்துள்ளது!

Last Updated : Mar 23, 2019, 08:57 PM IST
IPL தொடக்க விழா நிதி CRPF-க்கு  நன்கொடையாக வழங்கப்பட்டது! title=

இன்று துவங்கிய IPL 2019 தொடரின் தொடக்க விழா நிதியினை இந்திய ஆயுதப்படைக்கு அளிக்க BCCI முன்வந்துள்ளது!

சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் IPL 2019 தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கிய IPL 2019 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணியும், விராட் கோலி தலைமையிலான அணியும் மோதிக் கொள்வதால், IPL-12 தொடரின் தொடக்கமே அட்டகாசமாக அமைந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

முன்னதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக IPL 2019 தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. மேலும் தொடக்க விழாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகையினை ராணுவ வீரர்களின் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளது.

IPL 2019 தொடரின் தொடக்க விழாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகை 20 கோடி எனவும், இதில் 11 கோடி ரூபாய் இந்திய ராணுவத்திற்கும், 7 கோடி ரூபாய் மத்திய காவல் படைக்கும், விமான படை மற்றும் கப்பல் படைக்கு தலா ஒரு கோடி பிரித்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து IPL நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் தெரிவிக்கையில்., வழக்கமான வகையில் IPL தொடரை துவங்குவதற்கு பதில், துவக்க விழாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை நல்ல காரியத்திற்கு செலவிட்டு தொடரை துவங்கலாம் என முடிவு செய்தோம். அந்த வகையில் IPL தொடரின் துவக்கவிழாவினை கைவிட்டு அந்த நிதியை இந்திய ராணுவத்திற்கு அளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News