IPL 2023 CSK vs SRH: நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் - அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி 35 ரன்களை குவித்த நிலையில், ஆகாஷ் சிங் ப்ரூக் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 18(13) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அபிஷேக் சர்மா 34(26), ராகுல் திரிபாதி 21(21), மார்க்ரம் 12(12), அகர்வால் 2(4), கிளேசன் 17(16) ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால், ஹைதாராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே எடுத்தது.
A strong bowling effort from @ChennaiIPL restricts #SRH to 134/7 in the first innings.
Can @SunRisers successfully defend this total?
Scorecardhttps://t.co/0NT6FhLKg8#TATAIPL | #CSKvSRH pic.twitter.com/pDFFOinDxU
— IndianPremierLeague (@IPL) April 21, 2023
ஜடேஜா 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆகாஷ் சிங், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஹைதராபாத் அணியில் யான்சன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியை காண பல்வேறு பிரபலங்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து வந்து சென்னை அணிக்கு ஆதரவு அளித்தார்.
Watching...CSK vs SRH... at chennai.... pic.twitter.com/hQVkakDT8L
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) April 21, 2023
அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் உடன் இருந்து ஆட்டத்தை கண்டுகளித்தனர். மேலும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியை காண வருகை புரிந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ