Viral Video: பழைய பன்னீர்செல்வமாக வந்த தோனி... சிக்ஸரில் சொக்கி நிற்கும் ரசிகர்கள்!

IPL 2023, MS Dhoni: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், வலைப்பயிற்சியில் தோனி சிக்ஸர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2023, 01:24 PM IST
  • மார்ச் 2ஆம் தேதி சிஎஸ்கே அணி சென்னை வந்தது.
  • ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது.
  • இது தோனியின் கடைசி தொடர் என தகவல்.
Viral Video: பழைய பன்னீர்செல்வமாக வந்த தோனி... சிக்ஸரில் சொக்கி நிற்கும் ரசிகர்கள்! title=

IPL 2023, MS Dhoni: கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்தாண்டை போல 10 அணிகள் உள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 

உள்ளூர், வெளியூர் பாணியில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணியுடன் மோதுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் முதல் போட்டி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 

மொத்தம், 74 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 12 நகரங்களில் தொடர் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | WTC Final 2023: இலங்கை மட்டும் இதை செய்தால்.. இந்தியா வெளியேறுவது உறுதி!

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிப். 2ஆம் தேதி, கேப்டன் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே அணியினர் சென்னை வந்த நிலையில், நட்சத்திர ஓட்டலில் தங்கி வருகின்றனர். 

நீண்ட நாளுக்கு பின் சென்னை அணியினர் சேப்பாக்கம் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தோனியும் 3 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் இம்முறை விளையாட உள்ளார். இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என கூறப்படும் நிலையில், அவரின் வழியனுப்பும் போட்டியும் (Farewell Match) சென்னையில்தான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவதை அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது. குறிப்பாக, தோனி வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள், புகைப்படங்கள் கடந்த இரு தினங்களாக இணையத்தை கலக்கி வருகின்றன. 

தோனி வலைப்பயிற்சியின்போது, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீழே இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. பழைய தோனியை மீண்டும் பார்ப்பது போல் உள்ளதாக தோனியின் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தோனி, 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று வருகிறார். அவர் ஓய்வுபெற்ற பின், 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது குறிப்பிடதக்கது. 

மேலும் படிக்க | WPL 2023: கியாரா அத்வானி - கீர்த்தி சனான் நடனத்தில் பிரம்மாண்டமாக தொடங்கிய மகளிர் ஐபிஎல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News