ஐபிஎல் 2024 தொடரில் பேட்டிங்கிற்கு சொர்க்கபூமியாக மாறியிருக்கிற விசாகப்பட்டனத்தில் கேகேஆர், டெல்லி போட்டி நடந்தது. டாஸ் வெற்றி பெற்றதும் கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டிங் எடுப்பதாக அறிவித்தார். இதன்படி களமிறங்கி அதிரடியாக ரன்களை சேர்த்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 271 ரன்களை குவித்தனர். சூறாவளிபோல் கேகேஆர் பேட்ஸ்மேன்கள் வெகுண்டெழுந்து, டெல்லி பந்துவீச்சாளர்களை நோகடித்தனர். சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசி கேகேஆர் பேட்ஸ்மேன்கள் படம் காண்பித்தனர்.
மேலும் படிக்க | மீட்டிங்கிற்கு லேட்டா வந்த இஷான் கிஷன்! தண்டனை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்
ஓப்பனிங் இறங்கிய சால்ட் மட்டும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருந்தார் சுனில் நரைன். அவருக்கு பக்கபலமாக ரகுவன்ஷியும் அதிரடியாக விளையாட கேகேஆர் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பவர்பிளேயில் கேகேஆர் ஒரு விக்கெட் இழந்து 88 ரன்கள் எடுத்திருந்தது. முதல் ஓவரில் ஆரம்பித்த கேகேஆர் அணியின் பேட்டிங் சுனாமி 20வது ஓவர் வரை தொடர்ந்தது. சுனில் நரைன் 39 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து நரைன் ஆட்டமிழந்தார். இதில், 7 சிக்ஸ் மற்றும் 7 பவுண்டரி அடங்கும்.
இதேபோல், 18 வயதே ஆன அறிமுக வீரர் ரகுவன்ஷி தன் பங்கிற்கு 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். முடிவில், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 2 சிக்ஸ் உள்பட 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ஆண்ட்ரே ரஸல் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் அவுட்டானார்.
இஷாந்த் சர்மா அற்புதமாக வீசிய யார்க்கர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. ஐபிஎல் ஹிஸ்டிரில் ஒரு அணி எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி எடுத்ததே ஐபிஎல் தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ