Jio-வின் அதிரடி சலுகை: இலவசமாக IPL போட்டிகளைக் காணலாம், பம்பர் பரிசுகளும் கிடைக்கும்

ஜியோ தன் பயனர்களுக்காக ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜியோ பயனர்களுக்கு IPL-ஐ இலவசமாக பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 9, 2021, 04:22 PM IST
  • IPL போட்டிகளைக் காண ஜியோ பயனர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு.
  • ஜியோவின் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், ஜியோ பயனர்கள் போட்டியை இலவசமாகக் காண முடியும்.
  • IPL ஏப்ரல் 9 முதல் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
Jio-வின் அதிரடி சலுகை: இலவசமாக IPL போட்டிகளைக் காணலாம், பம்பர் பரிசுகளும் கிடைக்கும்

ஜியோ திட்டத்தில் ஐபிஎல் 2021 ஐ இலவசமாக பார்ப்பது எப்படி:

ஜியோ தன் பயனர்களுக்காக ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜியோ பயனர்களுக்கு IPL-ஐ இலவசமாக பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜியோவின் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், ஜியோ பயனர்கள் போட்டியை இலவசமாகக் காண முடியும். இதற்கு, ஜியோ டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாருடன் உள்ளடக்க ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. ஜியோவின் ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நேரடியாகவும் போட்டிகளை பார்க்க முடியும். இந்த சிறப்புத் திட்டங்களுடன், 1 ஆண்டுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய 20-20 கிரிக்கெட் கொண்டாட்டமான IPL, ஏப்ரல் 9 முதல் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

ALSO READ: முழு IPL சீசனை Free ஆக பார்க்கணுமா?இதை செய்தால் போதும்!

பயனர்கள் தினசரி ரூ .401 க்கு 3 GB மூலம் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் கூடுதல் 6 GB தரவுகளும் கிடைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளைக் காண போதுமான தரவு கிடைக்கும்.

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5GB கொண்ட 84 நாள் செல்லுபடியாகும் திட்டத்தையும் ரூ .777 க்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கூட, வாடிக்கையாளர்களுக்கு 5 GB தரவின் கூடுதல் நன்மை கிடைக்கும். பயனர்களுக்கு 2 GB தினசரி தரவுகளும் வழங்கப்படுகின்றன.

56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தின் விலை ரூ .598 ஆகவும், 365 நாட்களுக்கு திட்டத்தின் விலை 2599 ரூபாயாகவும் உள்ளது. 365 நாள் திட்டத்துடன், வாடிக்கையாளர் கூடுதலாக 10GB தரவைப் பெறுவார். இதனால் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க போதுமான தரவு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

பரிசையும் வெல்ல வாய்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ தனது கேமிங் தளமான 'Jio Cricket Play Along'-ஐ புதிய வடிவத்தில் கொண்டு வருகிறது. இதில் பயனர்கள் பெரிய பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். இது அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. சிறப்பு சேட் பாரில் ஈமோஜி ஸ்டிக்கர்கள் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அணியை உற்சாகப்படுத்த முடியும்.

ஜியோபோன் பயனர்களுக்காக ஒரு சிறப்பு புதிய ஜியோ கிரிக்கெட் செயலி தொடங்கப்படும், இதில் ஜியோபோன் பயனர்கள் இலவசமாக ஸ்கோர் அப்டேட்டைக் (Score Update) காண முடியும். மேலும், வினாடி வினாவில் பங்கேற்று பரிசையும் வெல்ல முடியும். IPL-ல் பங்கேற்கும் 8 அணிகளிலும் ரிலையன்ஸ் ஜியோ ஒரு பங்காளியாகும். ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் காபி செஷனில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு பெறலாம்.

ALSO READ: 8 அணிகள் பங்கேற்கும் IPL கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடக்கம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News