மும்பை பிளாட் முதல் BMW கார் வரை; ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு குவிந்த ஆடம்பர பரிசு பொருட்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பரிசு பொருட்கள் திருமணதிற்கு குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2023, 08:49 AM IST
மும்பை பிளாட் முதல் BMW கார் வரை; ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு குவிந்த ஆடம்பர பரிசு பொருட்கள் title=

கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி திருமணம் அண்மையில் நடைபெற்றது. இருவருமே பிரபலங்கள் என்பதால் பாலிவுட், கிரிக்கெட் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் ராகுல் - அதியா திருமணத்தில் பங்கேற்று நட்சத்திர தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதியாவின் தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி, மகள் அதியா - மாப்பிள்ளை ராகுலுக்கு மும்பையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட் ஒன்றை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் அந்த பிளாட்டில் விரைவில் குடியேற இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. 

மேலும் படிக்க | IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?

இதுமட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்கள், பாலிவுட் பிரபலங்களும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை நட்சத்திர தம்பதிக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதியாவை பாலிவுட் திரைத்துறையில் அறிமுகம் செய்த சல்மான் கான், ராகுல் - அதியா ஷெட்டிக்கு 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடி காரை பரிசாக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஜாக்கி ஷ்ராப் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருப்பதாகவும், அதியாவின் நெருங்கிய நண்பரான அர்ஜூன் கபூர் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வைர வளையலை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது. 

அதியா ஷெட்டிக்கு ஒருபுறம் பரிசு பொருட்கள் குவிந்து கொண்டிருக்கும்போது, கே.எல்.ராகுலுக்கும் அவரது கிரிக்கெட் கள நண்பர்கள் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்திருக்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிஞ்சா பைக்கை பரிசளித்துள்ளார். விராட் கோலி 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டப்யூ காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதுதவிர இன்னும் சில விலையுயர்ந்த பரிசு பொருட்களும் நட்சத்திர தம்பதிக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் இந்த தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என சுனில்ஷெட்டி குடும்பத்தினர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | இந்திய அணியுடன் தோனி... சொந்த ஊரில் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News