ராகுல், ஸ்ரேயஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி...

நியூசிலாந்தி கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

Last Updated : Jan 26, 2020, 03:56 PM IST
ராகுல், ஸ்ரேயஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி... title=

நியூசிலாந்தி கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அக்குலாண்ட் மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டின் 33(20), கொளின் முன்றோ 26(25) ரன்கள் குவித்தனர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்தியா தரப்பில் ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார். சர்துல் தார்கூர் மற்றும் ஜாஸ்பிரித் பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

நியூசிலாந்தில் இந்தியா, 5 T20I தொடர், 2020 - 2-வது T20I
 
நியூசிலாந்து
132/5 (20.0)
VS
இந்தியா
135/3 (17.3)
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா...
சிறந்த பேட்டிங்
KL ராகுல் (IND)
57 (50)
ஸ்ரேயஸ் ஐயர் (IND)
44 (33)
சிறந்த பந்துவீச்சு
ரவிந்திர ஜடேஜா (IND)
2/18 (4)
டிம் சௌத்தி (NZ)
2/20 (3.3)

 

இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய கிரிகெட் அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா 8(6) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். எனினும் மறு முறையில் கே.எல் ராகுல் இறுதி வரை நின்று விளையாடி 57(50) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஸ்ரேயஸ் ஐயர் 44(33) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 17.3-வது பந்தில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இதனையடுத்து வரும் ஜனவரி 29-ஆம் நாள் இவ்விரு அணிகளும் செட்டான் பார்க் மைதானத்தில் 3 டி20 போட்டியில் களம் காண்கிறது... இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப்பெற்றால் தொடரை வெல்லும், அதேவேளையில் அடுத்து வரும் மூன்று போட்டிகளிலுல்ம் நியூசிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News