INDvsWI: நாளை 3_வது ஒருநாள் போட்டி.. ஹாட்ரித் சதம் அடிப்பாரா விராட்?

புனேவில் நாளை நடைபெறும் 3_வது ஒருநாள் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2018, 04:47 PM IST
INDvsWI: நாளை 3_வது ஒருநாள் போட்டி.. ஹாட்ரித் சதம் அடிப்பாரா விராட்? title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எனினும் நேற்று நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில் நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பந்து வீச்சில் மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதனால் அடுத்த நடக்கவிருக்கு மூன்று போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா சேர்க்கப்பட்டு உள்ளனர். 

பேட்டிங்கை பொருத்த வரை இந்திய அணி வலிமையாக இருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் இரண்டு சதம் அடித்துள்ளார். நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியிலும் ஹாட்ரித் சதம் அடிப்பாரா? என எதிர் பார்க்கப்படுகிறது.

 

மேற்கிந்தியா அணியும் பேட்டிங்கில் வலிமையாக உள்ளது. கடைசி போட்டியில் போராடி இந்திய அணிகயின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்ததால், நாளை நடைபெறும் ஆட்டத்தில் மேலும் சிறப்பாக மேற்கிந்தியா அணி செயல்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெறும் நாளைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். மீதமுள்ள மற்ற இரண்டு போட்டிகள் அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி: விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, MS டோனி, ரிசாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், KL ராகுல், மனிஷ் பாண்டே.

 

Trending News