INDvsAUS: களம் இறங்கிய இந்திய அணி வெற்றி வாகைச்சூட 237 ரன்கள் தேவை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி 237 ரன்கள் தேவை.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 2, 2019, 06:58 PM IST
INDvsAUS: களம் இறங்கிய இந்திய அணி வெற்றி வாகைச்சூட 237 ரன்கள் தேவை title=

17:48 02-03-2019
இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி. தொடக்க வீரர்ரான சிகர் தவான் 0(1) ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

 


இந்திய அணி வெற்றி பெற 237 ரன்கள் தேவை.

இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வேற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். எனினும் நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் ரன்கள் சேர்ந்து வந்தது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

ஏற்கனவே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-௦ என்ற கணக்கி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News