IND vs PAK, Asia Cup 2023: ஆசிய கோப்பை தொடரின் குருப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரை நோக்கிய சீசன் தற்போது தொடங்கியிருப்பதால் உச்சக்கட்ட பரபரப்புடன் காணப்படுகிறது.
உலகத் தரமான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியும், வேற லெவல் பேட்டிங் படையை வைத்துள்ள இந்திய அணியும் எதிர்வரும் இந்த மூன்று மாதங்களில் பல முறை மோதும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில், இந்த பரபரப்பான கிரிக்கெட் சீசனில் இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டி அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைய போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த பக்கத்துடன் இணைந்திருங்கள்.