திடீர் சென்னை விசிட் அடித்த தோனி! காரணம் இதான்!

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தோனி பங்கேற்றார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 2, 2022, 12:47 PM IST
  • கிரிக்கெட் அகாடமி நிகழ்ச்சிக்கு வந்த தோனி.
  • சென்னையை அடுத்த திருவள்ளூரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உள்ளூர் வீரர்களை வெகுவாக பாராட்டினார்.
திடீர் சென்னை விசிட் அடித்த தோனி! காரணம் இதான்! title=

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், முன்னாள் ஐசிசி தலைவரும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான என் சீனிவாசனுடன் தலைமை விருந்தினராக தோனி பங்கேற்றார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஜூன் 1ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.  "எனது மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு (ராஞ்சி) நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்பட வேண்டும். நான் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன், ஆனால் நான் எனது மாவட்டம் அல்லது பள்ளிக்காக விளையாடாமல் இருந்திருந்தால் அது நடந்திருக்காது" என்று தோனி கூறினார். மேலும், 25 ஆண்டுகளை நிறைவு செய்த திருவள்ளார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை தோனி பாராட்டினார்.  

 

மேலும் படிக்க | பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?

சீனிவாசன் பேசுகையில், "எந்தவொரு சங்கமும் நீண்ட காலம் நீடிப்பது எளிதானது அல்ல. விளையாட்டின் மீதான காதல் அவரை (பாபா) கிரிக்கெட்டுக்காக உழைக்க வைக்கிறது. மைதானங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார்.  சங்கம் அனைவருக்கும் விளையாட்டுத்திறனின் மதிப்பைக் கற்றுக் கொடுத்துள்ளது. வீரர்களுக்கு (டிடிசிஏ) மேலும் பல விருதுகள் மற்றும் மேன்மைகள் கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று கூறினார்.  

 

டிடிசிஏ, தமிழ்நாடு விளையாட்டுப் பத்திரிக்கையாளர்கள் சங்கத்துடன் (டிஎன்எஸ்ஜேஏ) இணைந்து, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த பத்து விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை தோனியுடன் வழங்கினார்.  இந்தியா சிமெண்ட்ஸ் ஹோல்டைம் டைரக்டர் ரூபா குருநாத், சிஎஸ்கே சிஇஓ கேஎஸ் விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்திய சர்வதேச வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் எம்.டி.திருஷ்காமினி உட்பட ஏராளமான ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள் வீடியோ செய்திகள் மூலம் TDCA-க்கு வாழ்த்து தெரிவித்தனர். 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2015 உலகக் கோப்பை உட்பட 2012 மற்றும் 2015 க்கு இடையில் இந்திய கிரிக்கெட் அணியின் மீடியா மேலாளராக இருந்த TDCA செயலாளர் டாக்டர் ஆர் என் பாபா நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க | பீகாரில் எம்எஸ்.தோனி மீது வழக்குப்பதிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News