மீண்டும் பணிந்தது CSK.. இறுதி போட்டிக்கு முன்னேறியது MI!

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற ‘IPL 2019’ குவாளிப்பையர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது!

Last Updated : May 8, 2019, 08:12 AM IST
மீண்டும் பணிந்தது CSK.. இறுதி போட்டிக்கு முன்னேறியது MI! title=

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற ‘IPL 2019’ குவாளிப்பையர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது!

IPL 2019 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் அணிகள் முன்னேறின. இதில் முதல் இரண்டு இடத்தில் இருந்து சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான குவாளிப்பையர் போட்டி சென்னையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியை மீண்டும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சென்னை வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அம்பத்தி ராயுடு 42*(37) ரன்களும், டோனி 37*(29) ரன்களும் குவித்தனர்.

இதனைத்தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் ரோகித் சர்மா 4(2), குவிண்டன் டீ காக் 8(12) ரன்களுக்கு வெளியேறிய போதிலும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளாயடி 71*(54) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 18.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. எனினும் சென்னை அணிக்கு இறுதி போட்டிக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News