IPL2024: மும்பை இந்தியன்ஸூக்கு புது மலிங்கா கிடைச்சாச்சு - கதிகலங்கப்போகும் எதிரணிகள்..!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் போட்டி விளையாடப்போகும் நுவான் துஷாரா, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2024, 05:26 PM IST
  • மும்பை அணிக்கு கிடைத்த புது மலிங்கா
  • நுவான் துஷாரா சிறப்பான பந்துவீச்சு
  • வங்கதேச போட்டியில் ஹாட்ரிக் எடுத்தார்
IPL2024: மும்பை இந்தியன்ஸூக்கு புது மலிங்கா கிடைச்சாச்சு - கதிகலங்கப்போகும் எதிரணிகள்..! title=

வங்கதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, நுவான் துராஷாவின் அபாரமான பந்துவீச்சில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. நுவான் துஷாரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால், ஆட்டம் இலங்கை அணி பக்கம் திரும்பியது. இதனால் இப்போதே மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியில் இருக்கிறது. ஐபிஎல் 2024 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நுவான் துஷாராவை 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வங்கதேசம் 20 ஓவர் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் சவுமியா சர்க்காருக்கு அவுட் இல்லை என மூன்றாவது நடுவர் கொடுத்தது சர்ச்சையான நிலையில் அப்போட்டியில் வங்கதேச அணி சிறப்பாக பேட்டிங் விளையாடி 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | IPL 2024: 10 ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்களும்... அவர்களின் சாதனைகளும்!

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் ஓவரை வீசிய நுவான் துஷாரா, வங்கதேச அணியின் பேட்டிங்கை சீர்குலைத்தார். தன்னுடைய டாப் கிளாஸான பவுலிங்கில் நஜ்முல் ஹொசைன், டவ்ஹித் ஹ்ரிடோய் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிய துஷாரா, ஹாட்ரிக் பந்தில் மஹ்முதுல்லா ரியாத் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இந்த மூன்று விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

இது குறித்து பேசிய நுவான் துஷாரா, “ நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனது வாழ்க்கையில் முதல் ஹாட்ரிக். இதுபோன்ற ஒரு போட்டியில், அணிக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” எனகூறினார். அவரின் இந்த பார்ம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. மலிங்கா பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் அணியில் அதே இலங்கையைச் சேர்ந்த மற்றொரு வீரர் கிளாஸாக மும்பை அணிக்கு பந்துவீச இருக்கிறார். இது மும்பை அணிக்கு மகிழ்ச்சியாகவும் மற்ற அணிகளுக்கு கலக்கத்தையும் கொடுத்திருக்கிறது.

இதுதவிர தில்ஷன் மதுஷங்கா 4.6 கோடி ரூபாய், தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியை ரூ. 5 கோடிக்கும் மும்பை அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதனால் மும்பை அணி பந்துவீச்சில் செம பார்மில் இருக்கிறது. இதேபோல் பேட்டிங்கிலும் ரோகித், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கேம்ரூன் கிரீன், டிம் டேவிட் ஆகியோர் வாண வேடிக்கை காட்ட தயாராக இருக்கின்றனர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சரியான கலவையான அணியாக மும்பை இருப்பதால், இம்முறையும் ஐபிஎல் 2024 கோப்பையை வெல்லும் அணிகளுக்கான பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது.

மேலும் படிக்க | IPL 2024: இந்த வருடம் ஐபிஎல்லில் களமிறங்க உள்ள 5 புதிய கேப்டன்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News