ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்

IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா எடுக்கப்போகும் மிகப்பெரிய முடிவு குறித்த தன்னுடைய அனுமானத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 31, 2024, 01:01 PM IST
  • ஐபிஎல் 2025 ஏலத்தில் நடக்கப்போகும் டிவிஸ்ட்
  • மும்பை இந்தியன்ஸில் ரோகித் எடுக்கப்போகும் முடிவு
  • ரவிச்சந்திரன் கணித்திருக்கும் முக்கிய தகவல்
ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின் title=

IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது. இதனையொட்டி மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளும் எல்லாம் யாரை தக்க வைக்கலாம், யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற முடிவு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து ஏறத்தாழ ஒரு பட்டியலை தயார் செய்து வைத்துவிட்டன. ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் பல பெரிய பிளேயர்களை இந்த முறை வெளியேற்ற முடிவு செய்திருக்கின்றன. அந்த பிளேயர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் ஏலத்துக்கு வர இருக்கின்றன. 

அந்தவரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த முறை ஏலத்துக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கும் கேப்டன்சி விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. ரோகித் சர்மாவை ஆலோசிக்காமலே குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்குள் கொண்டு வந்த எம்ஐ நிர்வாகம், கடந்த  ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக திடீரென ரோகித்தை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு பாண்டியாவை கேப்டனாக்கியது. அதனால் ஒரு பிளேயராக மும்பை அணியில் விளையாடினார் ரோகித். அவரது ஆட்டமும் எதிர்பார்த்தளவுக்கு அந்த தொடரில் இருக்கவில்லை.

மேலும் படிக்க | ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

மேலும், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற அப்போதே முடிவு செய்துவிட்டதாகவும், ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக தன்னை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பிளேயர் அஸ்வின், ரோகித் சர்மா அப்படியான முடிவை எடுக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். கேப்டன்சியில் இருந்து நீக்கினாலும், ஒரு பிளேயராக மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ரோகித் விளையாடுவார் என்றும், ஒரு பிளேயராக அவர் இந்த முடிவை எடுப்பது மட்டுமே அவருக்கு சிறந்தது என்றும் கூறியுள்ளார்.,

புதிதாக ஒரு அணிக்கு சென்று அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று, அதனால் வரக்கூடிய தலைவலியை சமாளிப்பதைக் காட்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு பிளேயராக இருந்துவிடுவதே ரோகித் சர்மாவுக்கு நல்லது என அஸ்வின்  தெரிவித்துள்ளார். அவரும் அப்படியான முடிவையே எடுப்பார் என உறுதியாக நம்புவதாகவும் அஸ்வின் ஆணித்தரமாக கூறியுள்ளார். அதேநேரத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறினால் அவரை கேப்டனாக்க லக்னோ, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் முயற்சி செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | SRH தக்கவைக்கப்போகும் இந்த 4 வீரர்கள்... மெகா ஏலத்திற்கு காவ்யா மாறன் போடும் தனி கணக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News