ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர்

ரிஷப் பன்ட் முன்னாள் காதலியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்த பாகிஸ்தான் இளம் வேகபந்துவீச்சு புயல் நஷீம் ஷா, ரசிகர்கள் கவனித்ததும் உடனடியாக பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 13, 2022, 10:02 AM IST
  • ரிஷப் பன்ட் முன்னாள் காதலி குறித்து கிசுகிசு
  • பாக் இளம் புயலை காதலிக்கிறாரா? என கேள்வி
  • இணையத்தில் வைரலாகும் இருவரின் வீடியோ
ரிஷப் பன்ட் முன்னாள் காதலிக்கு ரூட் போட்ட பாகிஸ்தான் இளம் வீரர் title=

பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சு புயல் நசீம்ஷா, ரிஷப் பந்தின் முன்னாள் காதலியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வது கிசுகிசுவை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் இதனைக் கவனித்து உடனடியாக சமூகவலைதளங்களில் விவாதிக்க தொடங்கியவுடன், ஊர்வசி ரவுடேலாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்துள்ளார் நஷீம் ஷா. 

இவர்கள் இருவர் மீதான கிசுகிசு இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் மோதியபோதே தொடங்கிவிட்டது. அந்தப் போட்டியை நேரில் காண வந்திருந்த ஊர்வசி ரவுடேலா, நசீம்ஷாவை பார்த்து அடிக்கடி புன்னகைத்தார். மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நசீம் ஷாவின் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை தீயாக பரவத் தொடங்கியது. அப்போதே இருவருக்கும் இடையில் கிசுகிசு இருப்பதாக நெட்டிசன்கள் பற்ற வைத்திருந்தனர். அதற்கு மேலும் வலுசேர்ப்பதுபோல நஷீம் ஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி ரவுடேலாவை பின் தொடர ஆரம்பித்தார். 

மேலும் படிக்க | இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா!

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் ரிலேஷன்ஷிப் மலர தொடங்கியிருப்பதாக பேச்சு அடிபடத் தொடங்கியது. நசீம் ஷாவிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே இந்த கேள்விக்கு மறுப்பு தெரிவித்த அவர், ஊர்வசி ரவுடேலா யார் என்றே தனக்கு தெரியாது என பல்டி அடித்துவிட்டார். நீங்கள் நினைப்பது போல எந்த எண்ணமும் என்னிடம் இல்லை, தேவையில்லாத கதைகளை பற்றி பேச வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். நசீம்ஷாவுக்கு இப்போது 19 வயதாகிறது. ஊர்வசி ரவுடேலாவுக்கு 28 வயதாகிறது.

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடேலா அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரிஷப் பன்ட் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர், திடீரென பிரிந்துவிட்டார். பின்னர் அவர் குறித்து பொதுவெளியில் ஊர்வசி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இருவரும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்துக் கொள்ள, அந்த புகைச்சல் இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் தான் ஊர்வசி மற்றும் நசீம் ஷா கிசுகிசு கிளம்பியுள்ளது. 

மேலும் படிக்க | உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரெடி: ட்ரெண்டாகும் ஷமி, சாம்சன் - ரசிகர்கள் கொந்தளிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News