பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Updated: Jan 24, 2020, 03:55 PM IST
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்குலாண்ட் மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக கோலின் முன்றோ 59(42) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக கேன் வில்லியம்சன் 51(26), ரோஸ் டைலர் 54(27) ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் ஜாஸ்பிரித் பூம்ரா, சர்துல் தாக்கூர், யுசுவேந்திர சாஹல், சிவம் தூபே மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 7(6) ரன்களில் வெளியேற, லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56(27) ரன்கள் குவித்தார். அணித்தலைவர் விராட் கோலி 45(32) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று விளையாடி 58*(29) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனையடுத்து ஆட்டத்தினை 19-வது ஓவர் இறுதி பந்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.