நார்சிங் யாதவ் மீது தவறு இல்லை :தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி

Last Updated : Aug 1, 2016, 06:29 PM IST
நார்சிங் யாதவ் மீது தவறு இல்லை :தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி title=

நார்சிங் யாதவுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியால் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் ‘மெதான்டைனோன்’ என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் நார்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பர்வீன் ராணா இந்திய மல்யுத்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் நார்சிங் யாதவ் மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இந்த கமிட்டி முன்பு நார்சிங் யாதவ், வக்கீல்களுடன் ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.

இது குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய ஊக்க மருந்து தடுப்பு குழு, மேலும் கூறியுள்ளதாவது:-

மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் மீது எந்த தவறும் இல்லை. ஊக்க மருந்து கலந்திருப்பது தெரியமலே அவர் உணவு உட்கொண்டுள்ளார். விடுதியில் வழங்கப் பட்டுள்ள உணவில்தான் ஊக்க மருந்து கலந்து இருந்துள்ளது. தனது சக போட்டியாளர் செய்த நாசவேலையால் நார்சிங் யாதவ் பாதிக்கப்பட்டுள்ளார். நார்சிங் யாதவை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நார்சிங் யாதவிற்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதால், அங்கு கூடியிருந்த நார்சிங் யாதவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Trending News